தாராபுரம் குண்டடம் வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வினர் தேர்தல் விதிமீறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

தாராபுரம் குண்டடம் வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வினர் தேர்தல் விதிமீறல்

திருப்பூர்,ஏப்ரல்.7- தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் வாக்குச்சாவடியில் தேர் தல் நடத்தை விதிகளுக்கு முரணாக அத்துமீறல்களில் ஈடுபட்ட பாஜக வினர் மீது எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளாமல் கண் காணிப்பு குழுவினர், துணை இராணுவப்படையினர்,காவல்துறையினர் ஆகியோர் கப்சிப் ஆகி மவுனம் காத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நா.கயல்விழி உதயசூரியன் சின்னத் திலும் அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் நா.கயல்விழி க்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணியினர் பி.கயல்விழி,கே.கயல்விழி என்ற இருவரை திட்டமிட்டு சுயேட்சையாக களமிறக்கி வேட்புமனு தாக்கல் செய்தது குறித்தும்,இதில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப் பட்ட சின்னம் குறித்தும் திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பாஜக.வைச் சார்ந்த வர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக் கெதிராக வாக்காளர்களை இருசக்கர வாகனத்தில்  வாக்குச்சாவடியின் வாயில் வரை அழைத்து வருவதும் , அழைத்து வந்தவர்களிடம மறக்காமல் தாமரைக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தது.

இந்த அத்துமீறலை அங்கிருந்த பிற கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப் பாளர்கள், துணை ராணுவப்படையினர், காவல் துறையினர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

திருப்பூர் மாவட்ட பத்திரிகையா ளர்கள் குழு வாக்குச்சாவடிகளுக்கு செய்தி சேகரிப்பு பயணம் சென்றதன் ஒருபகுதியாக குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றபோது பாஜக வினரின் அத்துமீறலையும், தேர்தல் கண்காணிப்பு,துணை ராணு வம் மற்றும் காவல்துறை அதிகாரி களின் பொறுப்பற்ற தன்மையையும் காண நேர்ந்தது.

வாக்காளர்களை வாக்குச்சாவடி யின் வாயில் வரை அழைத்து வந்து தாமரைக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொன்ன நபரை அங்கிருந்த தேர்தல் கண் காணிப்பு அதிகாரி, துணை இராணுவப்படையினர்  மற்றும் காவல்துறையினர் ஆகியோ ரிடம் திருப்பூர் மாவட்ட பத்திரிகையா ளர்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி காட்டி தேர்தல் விதி மீறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர்.

தற்காலிக மாக அங்கு நிலைமை சரிசெய்யப்பட்டது.

மேலும் தாரா புரம்(தனி)சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியும்,தாராபுரம் சார் ஆட்சி யருமான பவன்குமார் கிரியப்பனவர் அவர்களிடம் இந்த அத்துமீறல் குறித்து பத்திரிகையா ளர்கள் கேட்ட போது மண்டல தேர்தல் அதிகாரிக்கு விதிமீறல் குறித்து தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினரைஅனுப்பி உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தெரி

வித்தார்.

 

No comments:

Post a Comment