ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல் சென்னை:

·   அரசமைப்புச் சட்டத்தின்படி, பதினெட்டு வயது நிரம்பிய ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாதா? என்று கூறி, மதம் மாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகவும், காவல்துறையை ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     1975-1977இல் அவசர நிலைப் பிரகடன காலத்திற்கு பிறகு எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு, நிறுவன அடிப்படையில், அரசமைப்பின் கொள்கைகளிலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம், சமூக மற்றும் தார்மீக அடிப்படையில், ஜனவரி 26, 1950 அன்று அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து எந்த நேரத்தையும் விட தொலைவில் உள்ளது என வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா குறிப்பிட்டுள்ளார்.

·     உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக சுகாதார மய்யத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிகளுக்கு பதிலாக ரேபிஸ் (நாய் கடி) எதிர்ப்பு ஊசி போடப் பட்டதாக கூறப்படுகிறது.

·     ரஃபேல் ஒப்பந்தத்தின் சமீபத்திய வெளிப்பாடுகள் தேசிய கருவூலத்திற்கு ரூ. 21,075 கோடி (2.81 பில்லியன் யூரோ) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

·     இந்திய அரசின் முன் அனுமதியின்றி லட்சத் தீவுகளுக்கு அருகே இந்திய கடலில் ஒரு பயிற்சியை மேற்கொண்டதாக அமெ ரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·             தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- குடந்தை கருணா

10.4.2021

Comments