வாக்கு இயந்திரங்கள் அசைந்திருந்தால் பணியில் இருப்பவர்களிடம் விசாரணை

 வேலூர், ஏப்.12  மூன்று அடுக்கு பாதுகாப்புடன் இருட்டறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அசைந்திருந்தால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர் களிடம் உரிய விசாரணை நடத்தப் படும் என்று அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பு மய்யங் களில் இருட்டறைகள் ஏற்படுத்தப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன.

இந்த பாதுகாப்பு மய்யங்களுக்கு 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதி காரிகள் கூறியதாவது: வாக்கு பதி வான இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள அறைகளுக்கு மூடி முத்திரை வைப்பதற்கு முன்பு, தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் முழுவதுமாக காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது, முத்திரைகள் அகற்றப்பட்டவுடன் உள்ளே உள்ள இயந்திரங்களை உடனடியாக எடுக்கக்கூடாது. வாக்குப்பதிவான இயந்திரங்கள் முழுவதும் காட்சிப் பதிவு செய்யப்படும். இதையடுத்து இயந்திரங்களை எடுக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், மூடி முத்திரை வைப் பதற்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சிப் பதிவுடன், முத்திரை அகற்றப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட காட்சிப்  பதிவு ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன்படி, இருட்டறைகளில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாறியிருந்தாலோ, அசைந்திருந்தாலோ தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படு வார்கள் என்று எச்சரிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments