தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2000த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

 அய்தராபாத்,ஏப். 12 கரோனா பொது முடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக் கானோர் வேலையிழந்துள்ள நிலையில், தனியார் பள்ளி கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் ஊதிய இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதை உணர்ந்த தெலுங்கானா அரசு, இவர்களுக்கு மாதம் ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 2021 முதல் பள்ளிகள் திறக்கப் படும் வரை இந்த உதவிப் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, இந்த உதவிகளை பெறு வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள் ளது. உதவித் தொகை பெறுபவர்கள் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கான அரிசி பொது விநியோக திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் இந்த அறிவிப்பால் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிலையங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது

 

இணையதளம் மூலம் மின்இணைப்பு :பெயர் மாற்றும் முறை அறிமுகம்

 சென்னை, ஏப்.12 நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வழங்குவதற்காக மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு மாற்றுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

தமிழகத்தில் உள்ள வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின்சார விநியோகத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே வழங்கி வருகிறது. மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவது, புகார் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இணையதளம் மூலம் அளித்து வருகிறது. அந்தவகையில் புதிதாக மின்சார விநி யோகம் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் மின்நுகர்வோர்களுக்கு பல்வேறு கார ணங்களால் சரியான நேரத்தில் மின்சார வினியோகம் வழங்க முடியாத நிலை இருந்து வந்தது.

வழங்க திட்டம்

இதனை மாற்றியமைப்பதற்காக, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு இணைய தளம் மூலம் பதிவு செய்வது போன்று, தற்போது ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை மற்றொருவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

பெயர் மாற்றத்திற்கு எப்படி விண் ணப்பிப்பது போன்ற வழிகாட்டும் விவரங் களும், தகவல்களும்  இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்ப வர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனுக் குடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மின்நுகர்வோர்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Comments