சென்னையில் அடுத்த 20 நாள்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் : மாநகராட்சி ஆணையர் தகவல்

 சென்னை, ஏப்.12  சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை பாலவாக்கம் பகுதி யில் மாநகராட்சி சார்பில் நடத் தப்படும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடு, வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு சளி, காய்ச் சல் அறிகுறிகள் தென்படும்போது, மருத்துவமனைக்குச் சென்று தொடக்கத்திலேயே பரிசோ தனை செய்துக்கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு கரோனா பரவுவதையும் தவிர்க்க முடியும். சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற் பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாட்களில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும். எனவே முடிந்தவரை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

சென்னையில் ஒரே பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால், குறைந்தது 50 பேர் மாநகராட்சி அலுவலர்களை அணுகினால், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக் கப்படும். வீடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வருபவர்களி டம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக் கடியான காலமாக இருக்கும். கரோனா விதிமீறல் களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்க்காக இல்லை. மக் களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே இந்த அபராத நட வடிக்கைகள். அதே போல் கரோனா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டதால் அதனை முழுமையாக முடக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

Comments