அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு

 வாசிங்டன், ஏப். 6 அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.

பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல லட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது.இந்த நிலையில் இந்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் கசிந்து வருகிறது.கழிவு நீர் கசிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நச்சு கலந்த நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சுற்றுச்சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனைத் தொடர்ந்து மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மாகாணம் முழுவதும் அவசர நிலையை அறிவித்தார்.தம்பா நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.கழிவுநீர் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்தோனேசியாவில் கன மழை:பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு

ஜகர்தா, ஏப்.6 இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழையால் பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடை விடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள் ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோ னேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment