கப்பல்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

ஜோத்பூர், ஏப்.6 எதிரிகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து கடற்படை கப்பல்களை பாதுகாப்பதற்காக சாப் என்ற அதிநவீன தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி..) முற்றிலும் உள் நாட்டிலேயே இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இது, சமீபத்தில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதன் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. ஏவுகணைகளை வானில் வெற்றிகரமாக திசைதிருப்பியது. இதற்காக, டி.ஆர்.டி.. அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் ராஜ் நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.

 

பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து தப்பிய மத்திய அமைச்சர்... வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகைப் போராட்டம்...

சண்டிகர்,ஏப்.6 மத்திய பா... அரசு கொண்டு வந்துள்ள- கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லியின் மூன்று முக்கிய நுழைவாயில்களான திக்ரி, காஸிப்பூர், சிங்குஆகியவற்றை 130 நாட்களுக்கும் மேலாகமுற்றுகையிட்டுள்ள அவர்கள், 250 விவசாயிகள் உயிரிழந்தும், போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருக் கின்றனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பாஜக தலைவர்கள் வீதியில்நடமாட முடியாத அளவிற்கு- விவசாயிகள் அவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

அண்மையில், முக்த்சர் மாவட்டம்மாலவுட்பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங்கை முற்றுகையிட்ட விவசாயிகள், அவரைத் தாக்கி ஆடை களைக் கிழித்தெறிந்தனர். இதனால், பஞ்சாப்பில் பாஜக தலைவர்களுக்கு தற்போது காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருக்கும் சோம் பிரகாஷ், பாஜக கட்சி கூட்டத்திற்காக, ஞாயிறன்று (4.4.2021) பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர்சாஸ்திரி நகருக்கு வந்த நிலையில், அவரும் விவசாயிகளிடம் சிக்கிக் கொண் டார். விவசாயிகள் அவரையும் முற்றுகையிட முயன்றனர். இதைக்கண்டு அவர்அலுவலகத்திற்குள் ஓடவே, விவசாயிகளும் அவரை விரட்டி வந்தனர். சாலைத்தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அமைச்சரை அவர்களிடமிருந்து தப்பவைத்தனர். எனினும், வேளாண் சட்டங்களையும், பாஜக அரசையும் கண்டித்து முழக்கமிட்டு, விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Comments