பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் மருத்துவமனையிலிருந்து கரோனா மருந்து திருட்டு

போபால்,ஏப்.18- மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது.  இதுவரை 4,425 பேர் வைரஸ் தொற்றால் உயிரி ழந்தனர்.

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்தான் ரெம்டெசிவர் டோஸ்கள் போபால் அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டுள்ள தகவல் வெளி யாகியுள்ளது. 850 டோஸ் ரெம்டெசிவர் தடுப்பு மருந்துகள் தற்போது காணாமல் போயுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளதுஇதுகுறித்து விரிவான விசாரணை தேவை என்று மருத்துவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்தனியார் மருந்து நிறுவனங்கள் உயிர் காக்கும் மருந்துகளை விற்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டி ருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறதுதடுப்பு மருந்து டோஸ்கள் காணாமல் போனதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Comments