ஹாங்காங் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக ஜனநாயக செயல்பாட்டாளருக்கு 14 மாதங்கள் சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

ஹாங்காங் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக ஜனநாயக செயல்பாட்டாளருக்கு 14 மாதங்கள் சிறை

ஹாங்காங், ஏப். 18 ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய போராட்டத்தை ஒருங்கி ணைத்ததாக தொடரப்பட்ட வழக் கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளரான ஜிம்மி லேய்க்கு 14 மாதங்கள் சிறை தண் டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து ஜனநாயக உரி மைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடை பெற்று வந்தது. ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனா வுக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத் தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாங்காங் நிர்வாகம் முயற்சி மேற் கொண்டது.

இதை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிகப்பெரிய போராட் டம் நடைபெற்றது. ஹாங்காங் ஜன நாயக செயல்பாட்டாளர்கள் தலை மையில் நடைபெற்ற அப்போராட் டத்தில் லட்சக்கணக்கானோர் பங் கேற்றனர்.

ஹாங்காங் வரலாற்றில் நடை பெற்ற மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக 2019ஆம் ஆண்டு போராட் டம் கருதப்படுகிறது. போராட்டங் களை தொடர்ந்து ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடை பெற்ற ஹாங்காங் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக ஜனநாயக ஆதர வாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டனர்.

இவர்களில் ஹாங்காங்கின் பிரபல செய்தி நாளிதழான ஆப்பிள் டெய்லி நிறுவனரும், தொழிலதிப ருமான ஜிம்மி லேய்யும் ஒருவர். அவருடன் சேர்த்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட் டவர்கள் மீது சட்டவிரோதமாக போராட்டங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டு ஹாங்காங் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த விசாரணையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை சட்டவிரோதமாக ஒருங்கிணைத்த தாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாக ஹாங்காங் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப் பட்ட அனைவருக்கும்   தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில் 2019 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு தலைமை தாங்கிவர்களில் ஒருவரான தொழிலதிபரும், ஜனநாயக செயல் பாட்டாளருமான ஜிம்மி லேய்க்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

ஜனநாயக செயல்பாட்டாளர் களில் எஞ்சியோருக்கு குற்றத்திற்கு ஏற்ப 8 முதல் 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment