தடுப்பு மருந்து விவகாரம் - மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கக் கோரும் ராஜ் தாக்கரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

தடுப்பு மருந்து விவகாரம் - மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கக் கோரும் ராஜ் தாக்கரே!

மும்பை, ஏப். 18- கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசே, சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி யுள்ளார் மகாராட்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி யுள்ளார் ராஜ் தாக்கரே. இவர், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கரோனா தாக்கம் தொடர்பாக தனது பெரிய கவலையைத் தெரிவித்துள்ள ராஜ் தாக்கரே, மராட்டியத்திலுள்ள தனியார் ஏஜென்சிகள், தாமாகவே சுதந்திரமாக தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் மற்றும் புனேயிலுள்ள சீரம் நிறுவனம், மராட்டியத்தில் சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வ தற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அதேசமயம் அதில் ஒரு ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்ட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹாப்கின் பயோ-பார்மசூட்டிகல் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் ஆகியவற்றுக்கும், தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் அனுமதியை வழங்க வகைசெய்து, அதன்மூலம் போதுமான அளவிலான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கும் வகைசெய்ய வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்று குறைந்துள்ளது

பொது இடங்களில் இனி முகக் கவசம் தேவையில்லை: இஸ்ரேல் அறிவிப்பு

ஜெருசலேம், ஏப். 18- பொது இடங்களில் இனி முகக் கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாடு அறிவித்து உள்ளது. 

கரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ள தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்க முகக் கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலையில் நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முகக் கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முகக் கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை என்று கூறி உள்ளார்.

கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமா கவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக் கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாக்கமான தொழில்நுட்பத்தில்

வேளாண் வாகனம் அறிமுகம்

சென்னை, ஏப்.18  இந்திய டிராக்டர் தொழில்துறையில் மற்றுமொரு புதிய தொழில்நுட்பத்தை இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, அதிநவீன சோலிஸ் உயர்வகை 5015 டிராக்டர்  இந்தியச் சந்தையில் காலடி வைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பயணம் குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் / முன்னேற்றங்கள் குறித்தும் பேசிய இதன் செயல் இயக்குனர்  ரமன் மிட்டல், மற்ற பல நாடுகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் கொண்டு வந்து சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 3 வெவ்வேறு டிராக்டர்களின் பயனை, ஒரே வாகனமாகவே வழங்கும் சோலிஸ் உயர்வகை 5015 டிராக்டர் மூலம் நாங்கள் இந்தத் துறையில் நடைமுறையில் உள்ள புதுமையின் அளவை அதிகரித்துள்ளோம்.

50 குதிரை சக்தித் திறன் கொண்ட இந்த டிராக்டரின்

பொறியியல் திறன் மற்றும் செயல்பாடு 60 குதிரை சக்தித் திறன் கொண்ட டிராக்டருக்கு இணையாக உள்ளது. மறுபுறம் எரி பொருள் பயன்பாடோ, 45 குதிரை சக்தித் திறன் கொண்ட வாகனம் போல உள்ளது. அதனால் ஒரே வாகனத்தில்  3 வெவ் வேறு வாகனங்களின் பயனைக் காண முடிகிறது. அவ்வகையில் தேவையான நேரத்தில் இதன் சிறப்பு இயல்புகளைப் பயன்படுத்தி அதிக பலன் பெறுவதோடு, மற்ற நேரங்களில் வழக்கமான டிராக்டராகப் பயன்படுத்தவும் ஏற்றதாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment