தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது

சென்னை,ஏப்.18- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 17.4.2021 அன்று ஒரே நாளில் 9 ஆயிரத் துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 804 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 9,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9லட்சத்து 80ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவில் இருந்து நேற்று 17.4.2021 மட்டும் 5,263 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், தமிழ கத்தில் கரோனாவால் நேற்று 39 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்து 71 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 65ஆயிரத்து 635 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.  சென்னையில் மேலும் 2,884 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments