மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி, பலர் படுகாயம்

நேப்பித்தா, ஏப். 17 மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத் திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படு காயம் அடைந்தனர்.

மியான்மா நாட்டில் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கூட இருந்தது. ஆனால் அந்த நாளில் ராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றியது.

அந்த நாட்டில், நோபல் அமைதி பரிசு பெற்ற ஆங் சான் சூ கி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்ட்ட அரசாங் கத்தை ராணுவம் வெளியேற்றியது. அத் துடன் சூ கி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தது.

மியான்மாவில்ஜனநாயக ரீதியிலான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று  அங்கு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ராணுவ ஆட்சிக்கு எதிரா கவும், ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாக வும் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக பன்னாட்டு அளவில் பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.

மியான்மாவில் திங்கியன் என்று அழைக்கப்படுகிற 5 நாள் புத்தாண்டு விடுமுறை 13.4.2021 அன்று தொடங் கியது. ஆனால் ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர், தங்கள் வழக்கமான கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு, ராணுவ ஆட்சி மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண் டலேவில் நேற்று அறவழிப்போராட் டத்துக்கு அழைப்பு விடுத்து, மருத்துவ தொழிலாளர்கள் பெரிய அளவில் கூடி இருந்தார்கள்.

ஆனால் அவர்களை விரட்டியடிப் பதற்காக அங்கு ராணுவத்தினர் குவிக் கப்பட்டனர். இதனால் அங்கு பதற்ற மான சூழ்நிலை உருவானது.

போராட்டக்காரர்களில் பலரை சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம், துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்தப் பகுதியில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு வர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Comments