சோமாலியாவில் குண்டுவெடிப்பு 17 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

மொகாதிசு, ஏப். 17- சோமாலி யாவில் பயங்கரவாதிகள் சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு சிற்றுந் துவில் சென்ற 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள அல் சபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ் வப்போது அவர்கள் அந்த நாட்டில் பயங்கரவாத தாக்கு தல்களையும், நாசவேலைக ளையும் அரங்கேற்றி வரு கிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் (15.4.2021) சோமாலியாவின் தலைநக ரான மொகாதிசுவில் சாலை யோரம் அந்த பயங்கரவாதி கள்வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இது தெரியாமல் அந்த வழியில் ஒரு சிற்றுந்து சென்றபோது பயங்கர சத் தத்துடன் குண்டுகள் வெடித் தன. இதில் அந்த சிற்றுந்து சிக்கி உருக்குலைந்து போனது. அதில் பயணம் செய்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

குண்டுவெடிப்பில் சிக்கிய சிற்றுந்து, மொகாதிசு நகரில் இருந்து மிடில் சாபெல்லி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல் கள் கூறுகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை யினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுக ளில் மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நாசவேலைக்கு அல் சபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சாலையோர குண்டு வெடிப்பு சம்பவம், சோமாலியாவை உலுக்கி விட்டது.

Comments