அமெரிக்க நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை பெருமைப்படுத்தும் தீர்மானம்

 இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்

வாசிங்டன், ஏப். 17- அமெரிக்க நாடாளுமன்றத்தில் அம்பேத் கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்தார்.

இந்திய அரசியல் சாசனத் தின் சிற்பி, அண்ணல் அம் பேத்கரின் பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்பட லாம் என்பதற்காக அம்பேத் கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பின ரான ரோகன்னா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 14.4.2021 அன்று அறிமுகம் செய்த பின்னர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், உலகமெங் கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக் கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் பி.ஆர். அம் பேத்கரை பெருமைப்படுத் தும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன் என குறிப் பிட்டுள்ளார்.

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இந்த தீர்மா னத்தை அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2010ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அப் போதைய அமெரிக்க குடிய ரசுத் தலைவர் ஒபாமா பேசும் போது, நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என் பதைப்பற்றி கவலையின்றி, ஒவ்வொரு நபரும் தங்கள் திறனை நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். டாக்டர் அம்பேத்கரைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் தன்னை உயர்த் திக்கொண்டு, அரசியல் சாச னத்தின் அம்சங்களை எழுத முடியும். அது அனைத்து இந் தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது என கூறியதை தீர்மானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகன்னா குறிப்பிட்டுள்ளார்.

Comments