கரோனா நோய் தடுப்புக்கான தொலைநிலை மருத்துவக் கண்காணிப்பு

சென்னை, ஏப். 17- மருத்துவ தொலைநிலை தொழில்நுட்ப சேவைகளை ஒருங்கிணைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கிவரும் டோஸி (dozee) மருத்துவ நிறுவனம் தற்போது இந்தியாவில் நெருக்கடியை உருவாக்கியுள்ள இரண்டாவது கரோனா நோய் தொற்று அலை பெரிய அளவில் பரவுவதால், இதற்கான மருத்துவ சேவையை அளிக்க இந்நிறுவனம் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராட்டிரா, கருநாடகா போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக தொலைநிலை நோயாளி கண்காணிப்பு தீர்வுகளை அளிக்கவுள்ளது.

தொலைநிலை நோயாளி கண்காணிப்பு என்பது நபரின் நேரடி தொடர்பு, ஊழியர்களின் பற்றாக்குறையை நிர்வகித்தல் மற்றும் மக்களுக்கு கோவிட் நோய்த் தொற்றுக்களத்தின் போது ஏற்படும் அபாயங்களை கணிசமாக குறைக்க நவீன தொழில் நுட்ப சேவைகளை வழங்கும் என டோஸி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி முடிட்டாண்ட் வேட் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகள்

சென்னை, ஏப். 17- கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஆதரவாக கோவிட் ஆக்சன் கொலாப் (CAC) தொண்டு அமைப்பு கடந்த ஆண்டில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட சேவைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது.

ஆரம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தியது. பின்னர் இதுபோன்ற எதிர்கால நெருக்கடிகளுக்கு இந்த சமூகங்களை வலுப்படுத்தவும், மீட்டு எடுக்கவும், இந்த முன்முயற்சி பின்னடைவுகளை சமாளிக்க மீண்டெழக்கூடிய திட்டங்களை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:- நாங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அணுகியுள்ளோம், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளை வழங்குகிறோம். மேலும் அவர்களின் எதிர்காலத்திற்கான பின்னடைவுகளிலிருந்து மீள அவர்களுக்கு உதவுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments