சார்ஜா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை விதிமுறைகளில் மாற்றம்

சார்ஜாஏப்.16 சார்ஜா நெருக்கடி, அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பாதிப்பை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சார்ஜா பன்னாட்டு விமான நிலையம் வழியாக பயணம் செய்யும் பயணிகள் கரோனா பரிசோதனை செய்து கரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ் பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பரிசோதனையானது பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறையானது 5 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சார்ஜா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் வந்திறங்கிய பின்னர் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments