வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க புதிய செயலி

துபாய், ஏப்.16 இந்தியாவில் வெளிநாடுகளை சேர்ந்த நிறு வனங்கள் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக மத்திய வர்த் தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய செயலியைஅறிமுகம் செய்துள்ளார்.

 இது குறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் கரோனா தாக்கம் காரணமாக பெரும் பாலான வர்த்தகங்கள் டிஜிட் டலுக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எளிய முறையில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவ தற்காக இந்திய வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் சார்பில் டிஜிஎப்டி என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த செயலியை அய்.. எஸ் மற்றும் அலைபேசி மென்பொருள் உடைய செல்போன் மற்றும் கணினி களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களை வெளிநாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள்எளிதில் தொடர்பு கொண்டு அங் குள்ள பொருட்களை இறக் குமதி செய்யவும், தங்கள் பொருட்களை அங்குள்ள இறக்குமதியாளர்களிடம் தொடர்பு கொண்டு விற்பனை செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த செய லியை மத்திய வர்த்தகம் மற் றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியாவில் அறி முகம் செய்தார்.

இதன் மூலம் பன்னாட்டு வர்த்தகவாய்ப்புகளை மத்தியத் தர மற்றும் சிறு தொழில்களை ஊக்கப்படுத்தி வெளிநாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குபுதிய வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தி தருவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த செயலியானது இந்தியாவின் புதிய வர்த்தக கொள்கைகள், அறிவிப்புகள் ஆகிய வகைகளை உடனுக்கு டன் தரும் வசதியுடன் வடி வமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த செயலியானது வாரத்தில் 7 நாட்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

இதில் உலகின் எந்த மூலையில்இருந்தாலும் தொடர்பு கொண்டு வர்த்தக வாய்ப்புகளை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Comments