இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 16, 2021

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்

லண்டன், ஏப்.16 கரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான யான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.

அவரது இந்திய வருகையின்பேது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தெரிவித்த அவரது செய்தித் தொடர்பாளர், ஜான்சனின் பயணத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்த போரிஸ் ஜான்சனின் பயணம், இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment