பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல்

ஹவானா,ஏப்.18- கியூபா கம்யூ னிஸ்ட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ராவுல் காஸ்ட்ரோ (வயது 89) அறிவித்துள்ளார்.

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கியூபாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இங்கு, தலைநகர் ஹவானாவில் ஆளும் கம்யூனிஸ்ட கட்சி மாநாடு நடந்தது. இதில், ராவுல் காஸ்ட்ரோ, ''கட்சித் தலைவர் என்ற முறையில் கியூபாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட திருப்தியுடன் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு பதவி விலக முடிவு செய்துள்ளேன்,'' என அறிவித்தார்.

புதிய தலைவர் யார் என்பதை ராவுல் காஸ்ட்ரோ தெரிவிக்க வில்லை. எனினும், 2019 முதல், கியூபா அதிபராக உள்ள மிகல் டையஸ் கேனல் (வயது60) கம்யூ னிஸ்ட் கட்சி தலைவராக பொறுப் பேற்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த, 1959இல் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படையானது கியூபாவின் சர்வாதிகாரியான புல்ஜென்சியோ பட்டிஸ்டாவை விரட்டியடித்து கியூபா நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 1965இல் பிடல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். கியூபா வின் அசைக்க முடியாத சக்தியாக 2006இல் நோய்வாய்ப்படும் வரை திகழ்ந்தார். துவக்கம் முதல் பிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக அவரது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ செயல்பட்டு வந்தார். பிடல் காஸ்ட்ரோ 2008இல் கியூபா அதிபர் பதவியை ராவுலிடம் ஒப் படைத்தார். அதன்பின் 2011இல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பொறுப்பையும் ராவுல் ஏற்றுக் கொண்டார்.

பிடல் காஸ்ட்ரோ 2016இல்  மறைந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவுடன் ராவுல் காஸ்ட்ரோ நட்பு பாராட்டினார். அதனால், கியூபா மீதான பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது. கியூபாவில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை ராவுல் கொண்டு வந்தார். எனினும், தற்போது உணவுப் பஞ்சம், மக்க ளிடையே அதிகரித்துள்ள பொரு ளாதார ஏற்றத் தாழ்வு போன்றவை புதிதாக பொறுப்பேற்பவருக்கு பெரும் அறைகூவலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment