வேளச்சேரி மறு வாக்குப்பதிவில் 186 பேர் மட்டுமே வாக்களித்தனர்

சென்னை,ஏப்.18- சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92ஆவது வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நேற்று (17.4.2021) நடைபெற்றது.

வேளச்சேரி தொகுதியில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நாளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் இருசக்கர வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் வி.வி.பாட் எந்திரம் வேளச்சேரி தொகுதியில் 92ஆவது வாக்குச்சாவடியில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. 15 ஓட்டுகள் அதில் பதிவாகி இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 92ஆவது வாக்குச்சாவடியில் மறு வாக்குப் பதிவு நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந் நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட் பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நேற்று 17.4.2021 காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியான முறை யில் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 548 ஆண் வாக்காளர்களில் 186 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

Comments