நீதிமன்றக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை மறுஆய்வு செய்ய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

நீதிமன்றக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை மறுஆய்வு செய்ய வேண்டும்

 தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.6 வழக்கு தொடர்வதற்கு செலுத்தவேண்டிய நீதிமன்றக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான கே.வசந்த், சென்னை உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றக் கட்ட ணத்தை பல மடங்கு உயர்த்தியுள் ளது. அரசுக்கு எதிராக தொடரப் படும், ரிட், வழக்குக்கு முன்பு ரூ.200 ஆக இருந்த கோர்ட்டு கட்டணத்தை ரூ.ஆயிரமாக உயர்த்தியுள்ளது. அதேபோல், ரிட் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை ரூ.200-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. தமிழ கத்தில்தான் நீதிமன்றக்  கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. பழைய கட்டணத்தையே வசூலிக்க உயர்நீதி மன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 கொள்கை முடிவு

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நீதிமன்றக் கட்டணத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ரிட், ரிட் அப்பீல் வழக்குகளைத் தொடர செலுத்தவேண்டிய கட் டணத்தை அதிகரித்தாலும், வேறு சில வழக்குகளை தாக்கல் செய்ய செலுத்தவேண்டிய கட்டணங்களை குறைத்துள்ளது. கட்டணத்தை உயர்த்தியதை ரத்து செய்தால், அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இது அரசின் கொள்கை முடிவு என்ப தால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

மறுஆய்வு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்குரைஞர் கே.எம்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பு பதில்மனுவை படித்துப்பார்த்த நீதிபதிகள், வழக்குகளை தாக்கல் செய்ய செலுத்தவேண்டிய நீதிமன் றக் கட்டணத்தை அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுவதால், இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்ப வில்லை. அதேநேரம், இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

அரசு இதுகுறித்து முடிவு எடுப்பதற்கு வசதியாக, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment