“ஓட்டுக்குப் பணம் தரவில்லையாம்!” சாலை மறியல் செய்த மக்களால் பரபரப்பு

ராசிபுரம், ஏப்.6  ராசிபுரம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் 4.4.2021 அன்று முடி வடைந்த நிலையில், பணப்பட் டுவாடாவில் யாராவது ஈடுபடு கின்றனரா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராசிபுரம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள அம்மன் நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அரசியல் கட்சியினர் பணம் கொடுக்காமல் அடுத்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். அதில் 5 பேரை கைது செய்த ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் வெளிப்படையாக பணம் கேட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments