அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள் விதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள் விதிப்பு

வாசிங்டன், ஏப். 18 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்ட விவகாரம் தொடர் பாக ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை களை விதித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாக வும், ஜனநாயக கட்சி வேட்பாள ரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச் சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர் பாக ராபர்ட் முல்லர் தலைமையில், விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்தது உண்மை என்றாலும், ரஷ்ய அதிகாரி களுக்கும் டிரம்ப் பிரச்சார குழுவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என ராபர்ட் முல்லர் தலைமையிலான விசார ணைக்குழு நாடாளுமன்றத் தில் அறிக்கை தாக்கல் செய் தது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அமெ ரிக்க உளவுத்துறை கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அப்போதைய அதிபர் டிரம்புக்கு சாதகமான வகை யில் அவரை எதிர்த்து போட் டியிட்ட தற்போதைய அதி பர் ஜோ பைடன் மீது தவ றான, நிரூபிக்கப்படாத குற் றச்சாட்டுகளை, டிரம்ப் ஆத ரவாளர்கள் மூலம் பரப்ப ரஷ்ய அதிபர் புதின் உத்தர விட்டதாக அந்த அறிக் கையில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் அமெ ரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங் கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ் யாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தலையிட்டது மற்றும் அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியது ஆகிய விவகாரங்களில் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதர்கள் 10 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இதற்கான நிர்வாக உத்தரவை அதிபர் ஜோ பைடன் பிறப் பித்தார்.

No comments:

Post a Comment