நாசாவுடன் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

நாசாவுடன் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்


வாசிங்டன்
, ஏப்.18 நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3ஆவது முறை யாக விண்வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி மய் யத்திற்கு அனுப்பவுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி யிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை என்கிற வகையில் சுழற்சி முறையில் விண்வெளி வீரர் கள் பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்படு கிறார்கள்.

விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மய் யத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அரசு விண் வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறு வனம் க்ரூ டிராகன் விண்கலத் துடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்துள் ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 2 வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் சென்றனர்.

நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3ஆவது முறையாக விண் வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி மய்யத்திற்கு அனுப்பவுள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் , மேகன் மெக் ஆர்தர் , நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப் பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகிய 4 பேரும் ஏப்ரல் 22ஆம் தேதி புளோ ரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மய்யத்திலிருந்து ஏவப்படும் பால்கன் 9 ராக்கெட்டில் பறக்கவுள்ளனர். இவர்கள் 6 மாத காலம் அங்கிருந்து ஆய் வுகளை மேற்கொள்வர் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment