ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்: சீனா

பீஜிங், ஏப். 7 நாடுகளுக்கு இடை யிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானி கூறினார். 

இந்தியா கடந்த சில ஆண் டுகளாக அமெரிக்கா ஜப் பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவு படுத்தி வருகிறது.

அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்சு நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா ஜப் பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத் துக்கு பதிலளிக்கும் விதமாக இந்த பன்னாட்டு கூட்டு கடற் படை பயிற்சி நடப்பதாக பன் னாட்டு நோக்கர்கள் கருது கின்றனர். இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரி கையாளர்களை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர் பாளர் ஜாவோ லிஜியானிடம் இந்த கூட்டு கடற்படை பயிற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத் துழைப்பு பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என பதிலளித்தார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image