செவ்வாய்க் கோளில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

செவ்வாய்க் கோளில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்


 லாஸ்ஏஞ்சல்ஸ், ஏப்.7 நாசா விண்வெளி ஆய்வு மய்யம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக் காவின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் அனுப்பியபெர்சவ ரன்ஸ்விண்கலம் கடந்த பிப்ர வரி மாதம் 18ஆம் தேதி செவ் வாய் கிரகத்தில் வெற்றிகர மாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகு தியில் நிறுத்தப் பட்டுள்ளது.

இந்த பகுதியில் உயிரினங் களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பய ணம் செய்து செவ்வாய் கிரகத் துக்கு சென்றுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.

இதனால் அங்கு ஹெலி காப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உரு வாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகாப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment