இந்தோனேசியாவில் கன மழை பலி 160 ஆக உயர்வு

 ஜகர்தா, ஏப். 7 இந்தோனேசியா வில் கொட்டி தீர்த்த கன மழையால் பலியானோர் எண் ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிக ளில் ஏற்பட்ட புயல் காரண மாக இடைவிடாது கொட் டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை, வெள்ளப் பெருக்கில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு நுசா டென்ஹாரா தீவுப்பகுதி புய லால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 

இந்த புயல், மழை, நிலச்சரி வில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த புயலால் 10 ஆயிரத் திற்கும் அதிகமானோர் தற் காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தோ னேசியாவில் ஏற்பட்ட புயல், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காண வில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோனே சியாவின் சில பகுதிகள் கடும் மழை,  பலத்த காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மய் யம் எச்சரித்துள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image