இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க 28 நாள் அவகாசம்

 இஸ்ரேல், ஏப். 7- இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4ஆவது முறை யாக பொதுத்தேர்தல் நடந் தது.

இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி தலைமையி லான கூட்டணி 59 இடங்க ளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும் பான்மை கிடைக்கவில்லை.

அதேபோல் நேட்டன்யா ஹூவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்ட ணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக் கிறது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அந்த நாட்டின் அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பு விடுத் துள் ளார். மேலும் அவர் புதிய அரசை அமைப்பதற்கு நேட் டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்குள் நேட்டன்யாஹூ ஆட்சிய மைக்க தவறும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என உரிமை கோரும் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சி அமைக்க அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பார்.அப்படி யாரும் உரிமை கோர வில்லை என்றால் மீண்டும் பொது தேர்தலை நடத்த அதிபர் ருவன் ரிவ்லின் உத்தர விடுவார்.

 

Comments