ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நாளில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு, இன்னமும் ஆறு கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. அதற்குள் தேர்தல் முடிவுகளை கூற பிரதமர் என்ன கடவுளா? அல்லது 'சூப்பர்மேனா?' என்றும், தனது அரசின் அதிகாரிகளுக்கு உத்தரவுபோட இவர் யார்? என்றும் மம்தா வினவியுள்ளார்.

தற்போது நடைபெறும் தேர்தலில், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பார்வையிட மத்திய காவல் துறையை வைத்துள்ளது. ஆனால் மம்தா  வாக்குச் சாவடியில் இரண்டு மணி நேரம் முடக்கப்பட்டதற்கு அமைதி காக்கிறது. எதிர்க்கட்சிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது. பாஜக வேட்பாளர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் ஆணையம் மீது ஒரு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ஆல்வாரில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தனது விளம்பரத்திற்காக என கைது செய்யப்பட்ட அகில வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) மாணவர் தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஒரு முழு அடைப்பு வரக்கூடும் என்ற பயத்தில், மகாராட்டிரா நாசிக் நகரில்  இருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  மத்தியப் பிரதேசம், .பி., பீகார் மற்றும் வங்காளத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்

பிபிசி நியூஸ் தமிழ்:

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, (4.4.2021) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் .தி.மு.. சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல, நீட் பிரச்சனை யால் தற்கொலை செய்துகொண்ட அனிதா .தி.மு.கவுக்கு வாக்கு கேட்பதைப் போல காணொலி ஒன்றும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

2016 தேர்தலின்போது அதிமுக கொடுத்த மொத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை 19% என பிபிசி தமிழ் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

- குடந்தை கருணா

5.4.2021

No comments:

Post a Comment