காவல் அதிகாரி பலி; வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

காவல் அதிகாரி பலி; வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு

வாசிங்டன், ஏப். 4-  அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் கேபிடால் கட்டட பாதுகாப்பு அதிகாரி பலியான நிலையில் வெள்ளை மாளிகையின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தர விடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டடத்தின் வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியுள்ளார்.  இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந் தனர்.

இதன்பின்னர் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுநர் அதிகாரி களை கத்தியால் குத்தியுள்ளார்.  இதில், அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.  இதனை தொடர்ந்து கேபிடால் காவல்துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

எனினும், தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவரவில்லை.  அவ ரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.  ஆனால், வாசிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறும் பொழுது, இது பயங்கரவாத தாக்குத லுடன் தொடர்புடையது அல்ல என கூறியுள்ளார்.  ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கேபிடால் கட் டிடம் முடக்கப்பட்டு உள்ளது.  கட்டி டத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை.  இதேபோன்று கட்டிடத்திற்குள் செல்வ தற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் தாக்குதலில் கொல்லப் பட்டார்.  அவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர்.  இந்த தாக்கு தலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனும் நானும் மனமுடைந்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்கு போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவையும் பைடன் பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment