வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி

 வாசிங்டன், ஏப். 4-  வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற  தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட  நாடு களின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்  வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்தனர்.

அணு ஆயுதம் இல்லாத நாடாக வடகொரியாவை மாற்ற தொடர்ந்து மூன்று நாடுகளும் உறுதியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 15.3 கோடி டோஸ்

கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்

வாசிங்டன், ஏப். 4-  அமெரிக்காவில் இதுவரை 15.3 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு களின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளை யும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சிப் பொறுப் பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரு கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 15,76,06,463 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான தகவலின்படி மொத்தம் 15,36,31,404 டோஸ் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மய்யங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment