தைவானில் சுரங்கப்பாதையில் ரயில் தடம் புரண்டு விபத்து பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

தைப்பே, ஏப். 4- கிழக்கு தைவானில் ஒரு சுரங்கப் பாதையில் 2.2.2021 அன்று  காலை490 பயணிகளுடன்  சென்ற ரயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது 75 க்கும் மேற்பட்ட வர்கள் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து அமைச்சகம் குறைந் தது 72 பயணிகள் காயமடைந்து மருத் துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ள தாகவும்  சுரங்கப்பாதைக்குள் அதிகமான பேர் சிக்கி இருப்பதாகவும் கூறி உள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பொறியியல் பராமரிப்பு குழுவுக்கு சொந்தமான ஒரு லாரி மீது ரயில் மோதிதடம் புரண் டதாக தைவான் ரயில்வே தெரிவித்து உள்ளது.

எட்டு பெட்டிகளுடன் ரயில் தைதுங் செல்லும் வழியில் 490 பயணிகளுடன்  (01:28) ஹூலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் சென்றதாக தைவான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு தைவானின் புகழ்பெற்ற டாரோகோ ஜார்ஜுக்கு அடுத்ததாக ஹூலியன் ஒரு பிரபலமான இயற்கை நகரமாகும், மேலும் தைவானின் கிழக்கு ரயில் பாதை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும் இதன்  வியத்தகு கடற்கரை சாலை மற்றும் இயற்கைக்காட்சி பார்க்க அழகாக இருக்கும்.

சுட்டுரையில், தீவின் தலைவர் சாய் இங்-வென், பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை மீட்பதற்கும் உதவுவதற் கும் அவசர சேவைகள் அனுப்பப்பட்டு உள்ளன இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தை அடுத்து அவர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்,” என்று கூறினார்.

2018 இல் கிழக்கு தைவானின் யிலானில் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டு 18 பேர் உயிரிழந்தனர்.

1990 ஆம் ஆண்டில், மியாவோலியில் இரண்டு ரயில்கள் மோதியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.

Comments