இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.60 கோடி லஞ்சம் ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் ஊழலை மறைக்கும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 புதுடில்லி, ஏப். 6 இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் சுமார் ரூ.8.60 கோடியை தஸ்ஸோ நிறுவனம் இந்திய இடைத்தர கருக்கு லஞ்சமாக அளித்த தாக காங்கிரஸ் குற்றம் சாட் டியுள்ளது.

இது தொடர்பாக பிரான் ஸிலிருந்து வெளியாகும் மீடி யாபார்ட் என்ற புலனாய்வு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டி யுள்ளது. இவ்விதம் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் மீது மற் றொரு ராணுவ பேர வழக்கில் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டி ருப்பதாகவும் அந்த பத்திரிகை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஜெட் போன்று 50 மாதிரிகளை உருவாக்க இந்தப் பணம் பயன்படுத்தப் பட்டதாக தஸ்ஸோ நிறுவ னம் தெரிவித்துள்ளது. ஆனால் அவ்விதம் 50 மாடல்கள் எது வும் தயாரிக்கப்படவில்லை. அவ்விதம் தயாரிக்கப்பட்ட தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்த பத்தி ரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ரஃபேல் பேரம் தொடர் பாக முதலில் அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறை ஏஎப்ஏ தகவல்களை வெளியிட்டது. ரஃபேல் நிறுவனத்தின் கணக் குகளை தணிக்கை செய்தது. ஆனால் அந்த அறிக்கையை வழக்குரைஞர்கள் தங்களுக்கு ஆவணமாக பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை.

2017ஆம் ஆண்டு ஆவ ணங்களை தணிக்கை செய்த போது வாடிக்கையாளர்க ளுக்கு பரிசுப் பொருள் வழங் கியதற்காக செலவிட்ட தொகை என 5,08,925 யூரோக்கள் கணக்கில் காட்டப்பட்டிருந்த தாக ஏஎப்ஏ கண்டுபிடித்தது.

இந்தியாவைச் சேர்ந்த சுஷேன் குப்தா என்பவருக்குச் சொந்தமான டெப்சிஸ் சொல் யூஷன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இவர்மீது சிபிஅய் மற்றும் அமலாக்கத் துறை இயக்குந ரகம் முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்தியாவில் தஸ்ஸோ நிறுவனத்தின் துணை ஒப்பந் ததாரராக டெப்சிஸ் நிறு வனம் செயல்படுகிறது. இந் நிறுவனத்தின் சுஷேன் குப்தா மீது ஹெலிகாப்டர் பேர வழக் கில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏஎப்அய் அறிக்கையை ஆய்வு செய்த மீடியாபார்ட் நிறுவனம் வழக்கமாக அளிக் கப்படும் நன்கொடைக்கு மாறாக மிகப் பெரிய அளவில் டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு மார்ச் 30, 2017இல் தொகை வழங்கப் பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மொத்த ஆர்டர் தொகையில் 50 சதவீதமான 10,17,850 யூரோ தொகை (ரூ.8.6 கோடி) ரஃபேல் மாதிரி (டம்மி) உருவாக்கத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஒவ் வொரு மாடல் விலையும் 20 ஆயிரம் யூரோவாகும்.

ஆனால் மாதிரி ரஃபேல் விமானங்கள் தயாரித்தது தொடர்பான ஆவணங்களோ அல்லது அது பற்றிய தகவல் கள் எதையும்தஸ்ஸோ நிறுவ னம் அளிக்கவில்லை. ஆனால் இந்தத் தொகையானது வாடிக் கையாளருக்கு நன்கொடை யாக அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழலை மறைக் கும் விதமாக பிரதமர் நரேந் திர மோடி பேசியதற்கு உரிய விளக்கத்தை இப்போது அளிக்குமாறு மீடியாபார்ட் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங் கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும் போது, பிரான்சைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு நிறுவனமான ஏஎப்ஏ 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும், இதில் 11 லட்சம் யூரோக்கள் டெப்சிஸ் சொல்யூஷன் நிறு வனத்துக்கு அளிக்கப்பட்ட தாகவும் அறிக்கை மூலம் கண்டறிந்தது. அதில் வாடிக் கையாளர்களுக்கு அன்பளிப்பு வாங்கியதற்கான தொகை யாக 11 லட்சம்யூரோ குறிப் பிட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image