2036ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதா; ரஷ்ய அதிபர் கையெழுத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

2036ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதா; ரஷ்ய அதிபர் கையெழுத்து

மாஸ்கோ, ஏப். 6- ரஷ்ய அதி பர் புதின் அடுத்த 2 முறை பதவியில் நீடிப்பதற்கான மசோதாவில் கையெழுத் திட்டு உள்ளார்.

ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் (வயது 68) இருந்து வருகிறார்.  கடந்த இருபது ஆண்டுகளாக பதவி யில் நீடித்து வரும் புதின் புதிய சட்ட மசோதா ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளார்.

இதன்படி, அவர் தலா 6 ஆண்டுகள் என கூடுதலாக 2 முறை பதவியில் நீடிக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது.  இதனால், வருகிற 2036ஆம் ஆண்டு வரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடி யும்.

கடந்த ஆண்டு நடந்த அர சமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மசோ தாவை அவர் முன்மொழிந்து உள்ளார்.  இதற்கு கடந்த ஜூலையில் மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு உறுப்பினர் களும் ஒப்புதல் வழங்கினர்.  இதனை தொடர்ந்து, வருகிற 2024ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடிவடைந்த உடன் மீண்டும் அதிபர் தேர் தலில் அவர் போட்டியிட அனுமதி கிடைத்து உள்ளது.

No comments:

Post a Comment