தமிழகத்தில் ஒரே நாளில் 6711 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

தமிழகத்தில் ஒரே நாளில் 6711 பேருக்கு கரோனா பாதிப்பு

 புதுடில்லி, ஏப்.13 தமிழகத்தில் நேற்று 250 குழந்தைகள் உட்பட 6 ஆயிரத்து 711 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளதுதமிழகத்தில் நேற்றைய (12.8.2021) கரோனா பாதிப்பு குறித்து சுகா தாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 202 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதில் 4 ஆயிரத்து 36 ஆண்கள், 2 ஆயிரத்து 675 பெண் கள் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டி யலில் வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேரும், வெளிமாநிலங் களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 250 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,048 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று (12.4.2021) அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 105 பேரும், செங்கல் பட்டில் 611 பேரும், கோவையில் 604 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 17 பேரும், பெரம் பலூரில் 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 9 லட் சத்து 40 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கரோனாவுக்கு அரசு மருத் துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ள னர். இதில் சென்னையில் 8 பேரும், செங்கல்பட்டு, நாகப் பட்டினம், திருவள்ளூர், திருச்சி யில் தலா இருவரும், கோவை, திருப்பூர், வேலூரில் தலா ஒரு வரும் என 8 மாவட்டங் களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயி ரத்து 927 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள் ளனர். கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து செய்யப்பட்டுள் ளனர். இதில் அதிகபட்சமாக சென் னையில் 710 பேரும், செங்கல் பட்டில் 308 பேரும், கோவையில் 283 பேரும் அடங்குவர். இது வரையில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணம் அடைந்து உள்ள னர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 308 பேர் உள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 208 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 578 பேர் கண்டறியப் பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது. இதில் 3 ஆயிரத்து 551 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 பயணிகளுக்கு புதிய வகை கரோனா தொற்று ஏற்பட் டுள்ளது. 13 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 38 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment