ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல் அய்தராபாத்:

·   உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமை நீதிபதி போப்டே ஏப்ரல் 23ஆம் தேதி பணி ஓய்வு பெறு வதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24இல் பதவி ஏற்கிறார்.

டெக்கான் கிரானிகல் சென்னை:

·  நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. புதுச்சேரியில் 78 சதவீதமும், கேரளா வில் 73.5 சதவீதமும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி ஹிந்து:

முன்னாள் துணைப் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா... விஷம் போன்றவை. அவற்றை ருசித்தால், இறந்து விடுவீர்கள். ஆகவே, கருநாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களிலும், பிற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் பா...வை ஆதரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

- குடந்தை கருணா

7.4.2021

Comments