3 வாக்கு இயந்திரங்கள் கடத்தல்! மூவர் பிடிபட்டனர்!

 அ.தி.மு.க. வேட்பாளரைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கம்!

சென்னை, ஏப். 7- சென்னை வேளச் சேரி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களை சிலர் இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அந்த சிலர் நபர் களை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்,

சென்னையில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றனர்.

இதனைக் கண்ட பொது மக்கள் அந்த வாகனத்தை வழிமறித்து மடக்கினர். அதன் பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்ததும் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறியதாகத் தெரிகின்றது. எனினும் அம்மூவரும் .தி.மு.. வேட்பாளரின் ஆதரவாளர்கள் என்று பொது மக்களும், தி.மு.. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர் வாகிகளும் சந்தேகம் தெரிவித் தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக தி.மு.. கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முறை கேட்டிற்குத் தூண்டு கோலாக இருந்த .தி.மு.. வேட்பாளரை கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

விருதுநகரில் வாக்கு இயந்திரத் தில் குளறுபடி மேலும் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல் வேறு குளறுபடிகள் நடைபெற்று உள்ளன. பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல் படாததால் வாக்குப்பதிவில் தாம தம் ஏற்பட்டது. குறிப்பாக விருது நகர் சத்ரியா மகளிர் பள்ளி வாக் குச்சாவடி வாக்குப்பதிவின் போது அனைத்து வாக்குகளும் தாமரைச் சின்னத்திற்கே பதிவானதால் வாக் காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதும் அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அவினாசி: அதேபோன்று அவி னாசியில் உதயசூரியன் சின்னத் திற்கு பட்டனை அழுத்தினால் இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிந்ததாக புகார்கள் எழுந்தன.

ஆவடி: ஆவடி தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக் களித்தால் விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் வருவதாக புகார்கள் எழுந்தன.

இதேபோன்று தமிழகம் முழு வதும் பல்வேறு இடங்களில் வாக் குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

Comments