கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனி வாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, உத்தரப்பிரதேச முதல மைச்சர் சாமியார் ஆதித்யநாத் வந்து சென்றார்.
அப்போது, கோவையில் நடத்தப்பட்ட கலவரம் ஒருபக்கம் என்றால், சமூக வலைதளங்களில், அவர் குறித்து கிளம்பிய கிண்டல்களை நாம் கவனிக்க வேண்டும்.
பொதுவாக, சாமியார் ஆதித்யநாத், நாட்டின் மோச மான முதல மைச்சர், ஜனநாயகத் தின் களங் கம், காவி தீவிரவாதி என்றெல்லாம் பெயரெடுத்தவர், இவரை முதல் வராக மோடி நியமித்த போதே பெரும் விவாதப் பொருள் ஆனது.
ஆனால், தமிழ்நாட்டில், சமூக வலைதளங்களில், யோகியின் வருகை குறித்து இந்தமுறை எழுந்த விமர்சனங்களும் கிண் டல்களும் வேறுவகையாக உள் ளன.
அவற்றுள் சில மட்டும் இங்கே:
1. சாமியார் முதல்வர்: அது என்ன சாலைக்கு மேலே பெரிதாக ஏதோ இருக்கிறது?
மற்றொருவர்: அதற்கு பெயர் தாங்க பாலம் (flyover). தமிழ் நாட்டில் இதுபோன்று எக்கச்சக்க மாக பார்க்கலாம்.
2. மற்றொருவர்: உங்கள் மாநி லத்துல எத்தனை அரசு மருத்துவ மனைகள் இருக்கு?
சாமியார் முதல்வர்: ச்சீ... சீ... அதையெல்லாம் போய் யாரு கட்டுவா? அதெல்லாம் எதுக்கு? மாட்டுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்தாலே போதும்
3. மோடி: கோயம்புத்தூர் போனியே சாமியார், எப்படி இருந்துச்சி?
சாமியார் முதல்வர்: அட போங்க ஜி, விமான நிலையத்துல இருந்து, பிரச்சார மேடைக்கு போற வரைக்கு, வழிபூரா ஒரே கல்லூரிகள் மருத்துவமனைகள், சிறப்பான சாலைகள் நிறைய பள்ளிகள், பக்காவான கட்ட டங்கள், இன்னும் நிறைய
நிறை ய.... இந்த மாதிரி மாநிலத்துல நாம எப்பிடி ஜி பொழைக்
கிறது?
இப்படியான பலவித கிண் டல்கள், பாஜகவின் வளர்ச்சிக்கு எதிரான பிற்போக்கு அரசிய லையும், திராவிடத்தின் முற் போக்கு மற்றும் வளர்ச்சி அரசி யலையும் ஒப்பிட்டு, தினுசுதி னுசாக சமூகவலைதளங்களில் காணக்கிடைத்தன.
இத்தகைய கிண்டல் - கேலிகளை, சமூக வலைதளங்களில் பார்க்கும் வலதுசாரி ஆதரவாளர் களுக்கு, பதிலடி கொடுப்பதற்கு நிச்சயம் எதுவுமில்லைதான்!