பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்

 புதுடில்லி, ஏப். 7- தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் களாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.சத்தியநாராய ணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க டில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சென்னை, கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங் களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன.

இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழ கத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராய ணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் பெயர்களை பரிந்து ரைத்து மத்திய அரசுக்கு மத் திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துருஅனுப்பியது. அதற்கு மத்திய அரசுகடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

அதன் அடிப்படையில் புனேயில்உள்ள பசுமைத் தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பி னராக எம். சத்தியநாராயண னையும், தொழில்நுட்ப உறுப் பினராக கே.சத்யகோபாலை யும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத் தியநாதனையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தர விட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment