வேளாண் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

சென்னை, ஏப்.7- கடந்த 2020--2021ஆம் நிதியாண்டின் அடுத்தடுத்த மாதங்களில் கண்ட புதிய விற்பனை எண்ணிக்கை மற்றும் தொடர் சாதனைகளையொட்டி, சோனாலிகா டிராக்டர் நிறுவனம்மார்ச் 2021 உடன் முடிந்த நிதியாண்டில், இது வரையில்லா உச்சகட்ட விற் பனையாக, 1,39,526 டிராக் டர்களை அது விற்பனை செய்துள்ளது. அதன்மூலம், ஒட்டுமொத்த வேளாண் உபகரணத் தொழிலில் அதிக சந்தைப் பங்கை மிக விரைவில் பெற்ற நிறுவனமாகவும் இது பெயர் பெற்றுள்ளது.

ஏற்றுமதி சந்தையில் இந்நிறுவனம் நிகழ்த்தியுள்ள சாதனை குறித்துப் பேசிய சோனாலிகா குழுமத்தின் மேலாண் இயக்குனர் முனை வர் தீபக் மிட்டல்,  நாம் ஏற்கனவே அமைத்திருக்கும் வலுவான அடித்தளம்தான், மிகவும் கடினமான நேரத்தி லும்கூட நமது நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து மேம் பட உதவியுள்ளது.

 ஒரே ஆண்டில் 20 ஆயிரம் டிராக்டர்களை தாண்டி, ஏற்றுமதி செய்த ஒரே இந்திய நிறுவனம் என்ற பெயர் தற் போது நமக்கு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments