வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மய்யங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு


 சென்னை, ஏப். 7 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணும் மய் யங்களில் 3 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் அலுவலர்கள், வேட் பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. 

பின்னர் தேர்தல் ஆணைய வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண் ணும் மய்யங்களுக்கு துப் பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு கள் 75 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதிவாரி யாக பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மய்யங்களில் வைக் கப்பட்டன. ஒவ்வொரு தொகு திக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளி யேயும் கண்காணிப்பு கேம ராக்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மய்யங்களில் ஸ்டிராங் ரூம் என்றழைக்கப் படும் அறையில்தான் மின் னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை காவல்துறையினரும், வாக்கு எண்ணும் மய்யத்தின்நுழைவு வாயிலில் உள்ளூர் காவல்துறையின ரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குஎண்ணும் மய்யத்திலும் இதேபோல 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மய்யத்தி லும் 500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி விடக் கூடாது என்பதற்காகவும், கள்ள ஓட்டுபோட்டு விடக் கூடாது என்பதற்கும், வாக்கு எண்ணும் மய்யத்திலேயே வேட்பாளர்களின் முகவர் களும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள அறைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் எல்.இ.டி. திரையும் வைக்கப்பட்டுள் ளது. வாக்கு எண்ணும் மய் யங்கள் தற்போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்டிராங் ரூம் அருகே காவல்துறையி னர்கூட செல்லக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மய்யங்களில் வைத்து வாக்குகள் எண்ணப்படுகின் றன. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image