ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை பரவிட தேர்தல் ஆணையம் தான் காரணம். கட்டுப்பாடு விதிகளை மீறிய அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

·     தற்போது இந்தியா சந்தித்துவரும் கரோனா தொற்று பிரச்சினைக்கு பிரதமர் மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என எம்.அய்.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

·     இந்திய வளர்ச்சிக்கு கல்வியும் சுகாதாரக் கட்டமைப்பும் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும் என அமர்த்தியா சென் கூறியதற்கு மாறாக குஜராத் மாடல், தொழிலதிபர்களைச் சார்ந்து இருந்தது. அதன் பலனை தற்போது இந்தியா சந்தித்து வருகிறது என மூத்த பத்திரிகையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தி டெலிகிராப்:

·     .பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என முதல்வர் யோகி சொல்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது தம்பதியினர் .பி.யில் உள்ள ஆறு மருத்துவமனைகள் படுக்கைகள் இல்லை என்று காரணம் காட்டி, தங்களை அனுமதிக்க மறுத்த நிலையில் 850 கி.மீ. தூரம் பயணம் செய்து மேற்கு வங் காளத்தில் உள்ள சின்சுராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

·     ஆக்சிஜன் பற்றாக்குறை என எந்தவொரு மருத்துவமனையும் செய்தி வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிடும் மருத்துவமனைகள் மற்றும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச ஆணையர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

27.4.2021

Comments