24 மணி நேரத்தில் 2.17 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

புதுடில்லி, ஏப். 17- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2.17 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஜெட் வேகத்தில் கரோனா பரவுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற் படுத்தி உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடந்த மாதம் முதல் தீவிரமாக காட்டி வருகிறது. தற்போது அந்த கொடிய வைரஸ் தொற்று வேகமாக பரவுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக் கைகள் நிரம்பி வழிகின்றன. தீவிர தாக் குதலுக்கு ஆளானவர்களுக்கு மருத் துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோ கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழு வதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சம்.

அதன்மூலம் இந்தியாவில் இது வரை கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா ஆட்டம் அதிகமாக வுள்ள மராட்டிய மாநிலத்தில் மட் டுமே நேற்று 61 ஆயிரத்து 695 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 22 ஆயிரத்து 339 பேரும், டில்லியில் 16 ஆயிரத்து 699 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகா தார அமைச்சகத்தின் புள்ளிவிவரங் கள் காட்டுகின்றன.

நேற்று கரோனா பாதிப்புக்கு ஆளான 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேரில், 79.10 சதவீதத்தினர் 10 மாநி லங்களை சேர்ந்தவர்கள். அந்த மாநி லங்களின் பட்டியலில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், டில்லி, சத்தீஷ்கார், கர்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத் கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம் ஆகியவை இடம் பெற்றி ருக்கின்றன.

மராட்டியம், சத்தீஷ்கார், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி, தமிழகம், மத்தியப் பிரதேசம், குஜராத், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, உத்தர காண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய 16 மாநிலங்களில் தினமும் கரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறுமுகம் கண்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 302 பேர் கரோனா பிடியில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனை களில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வீடு திரும்பி உள்ளார்கள். இதன்மூலம் இந்தியாவில் கரோனா தொற்றில் இருந்து குணம் அடைந் தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் நேற்று 53 ஆயிரத்து 335 பேர் கரோனா தொற்றின்பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். டில்லியில் 13 ஆயிரத்து 14 பேரும், சத்தீஷ்காரில் 11 ஆயிரத்து 988 பேரும் கரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம், 87.80 சதவீதமாக இருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவில் பலியாவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 1,185 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Comments