தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 17, 2021

தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை: ஆய்வில் தகவல்

கலிபோர்னியா, ஏப்.17 தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டறியபட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக் கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 13 கோடியே 88 ஆயிரத்து 20 ஆயிரத்து 166 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 42 லட்சத்து 30 ஆயி ரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடியே 16 லட்சத்து 5 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் இதுவரை 29 லட்சத்து 84 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின்  கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் இது தொடர்பாக 50,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள் ளோம். இதில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும், அவர்களில் பெரும் பாலான வர்கள் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர். இறப்பும் ஏற்படவில்லை.

உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கரோனா வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுத்துவது குறை யும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வெளியேறும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள் என கூறப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு

நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்

ரியாத், ஏப். 17- சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

ஏமன் நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியா ளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. ஏமன் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலை மையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கின்றன. அதே வேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி படைகள் அவ்வப்போத தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜாசன் நகரில் அமைந்துள்ள சவுதி அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நேற்று (16.4.2021) ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்த தாக்குதல் ஏவுகணை தடுப்பு அமைப் பால் முறியடிக்கப்பட்டதாக சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment