மின்னணு வர்த்தக அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம்: சீன அரசு அதிரடி

பீஜிங், ஏப். 12 போட்டி நிறு வனங்களை அழிக்க முயற்சிப் பதாக குற்றம் சாட்டி அலி பாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. ஆங்கில ஆசிரியராக பணி யாற்றி வந்த இவர் கடந்த 1999ஆம் ஆண்டு தனது நண் பர்களுடன் இணைந்து தொடங்கியதுதான் அலி பாபா என்ற மின்னணு வர்த் தக நிறுவனம்.

சீன மக்களின் வாங்கும் (ஷாப்பிங்) பழக்கத்தையே புரட்டிப்போட்ட அலிபாபா, இன்று 200-க்கு மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரு கிறது.

அலிபாபா நிறுவனம், தனது போட்டி நிறுவனங் களை அழித்து தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற் றொருமை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டி அந்த நிறுவனத்தின் மீது சீன அரசின் சந்தை களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்..எம்.ஆர்) கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணையை தொடங்கியது.

அலிபாபாவின் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் திட்டம் உள்பட நிறுவனத்தின் போட்டி எதிர்ப்பு தந்திரங்களை தீவிர மாக ஆராய்ந்து வருவதாக எஸ்..எம்.ஆர். கூறியது.

வியாபாரிகளை, ஏதாவது ஒரு மின்னணு வர்த்தக நிறு வனத்தில் மட்டும் பிரத்யேக மாக பொருட்களை விற்க வைப்பதுதான் இந்த இரண் டில் ஒன்றைத் தேர்வு செய் யுங்கள் திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின்படி, ஒரு வியாபாரி, மற்ற மின் னணு வர்த்தக நிறுவனங்களி டம் பொருட்களை விற்றால், அப்படி விற்கும் வியாபாரி யின் பொருளைத் தேடி வரும் இணையத் தேடல்களை, மின்னணு வர்த்தக நிறுவனம் முடக்கிவிடும் என கூறப்படு கிறது.

இந்த நிலையில் அலிபாபா நிறுவனத்தின் மீது நடத்தப் பட்ட விசாரணையில் அந்த நிறுவனம் போட்டி நிறுவனங் களை அழிக்கும் நடவடிக்கை களில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சந்தைகளுக்கான ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அலிபாபா நிறுவனத்துக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயி ரத்து 924 கோடி) அபராதம் விதித்து சந்தைகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த அபராதம் அலிபாபா நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டின் மொத்த விற்பனை யில் 4 சதவீதத்துக்கு சமமாக இருக்கும் என அந்த ஆணை யம் தெரிவித்துள்ளது.

Comments