மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் பலி எண்ணிக்கை 614 ஆக உயர்வு

நேபிடாவ், ஏப். 12 மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தின்போது பாது காப்புப் படையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 614-ஆக உயர்ந்துள்ளது.

மியான்மாவில் கடந்த மாதம் 1ஆம் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் போராட் டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதில் பொது மக்கள், போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மியான்மாவில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள் ளதற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்றன.

அப்போது பாகோ நகரில் பாது காப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், துப்பாக்கிச்சூட்டில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக பாகோ நகர மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நகரின்தி பாகோ வீக்லிசெய்தித் தளம் தெரிவித்தது.

இதுவரை ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட் டங்களில், பாதுகாப்புப் படையின ரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614-ஆக உயர்ந்துள்ள தாக மியான்மா அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர் களில் 46 பேர் சிறுவர்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. போராட் டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 2,751 பேர் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதா கவும் அந்த அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக் கைகள் ஆகியவற்றின் மூலம் போராட் டக்காரர்களுக்கு ராணுவ ஆட்சியா ளர்கள் மிரட்டல் விடுத்து வந்தாலும், அதற்கு அடிபணியாமல் போராட் டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Comments