தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் 

வேளச்சேரி தொகுதி பிரச்சாரக்கூட்டத்தில் தளபதி மு..ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது தளபதி மு..ஸ்டாலின் பேசினார்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று  (3.4.2021) தி.மு.. வேட்பாளர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), காரப்பாக்கம் கணபதி (மதுரவாயல்), .எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), டாக்டர் எழிலன் (ஆயிரம்விளக்கு) மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா (வேளச்சேரி) ஆகியோருக்கு ஆதரவாக திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் வடக்கு மாட விதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து அவருக்கு கைசின்னத்தில் வாக்குகள் கேட்டு மு..ஸ்டாலின் பேசியதாவது:-

எந்த பொறுப்புக்கு வந்தாலும்...

1973ஆம் ஆண்டு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் அண்ணா சிலை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கு 20 வயது. இப்போது 68 வயது ஆகிறது. நான் இளைஞர் தி.மு.. அறக்கட்டளை தலைவராக இருந்தபோது, கலைஞரால் அண்ணா சிலை திறக்கப்பட்ட இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

என்னை நாட்டுக்கு அடையாளப்படுத்திய ஊரான திருவான்மியூருக்கு வந்திருக்கிறேன். இந்த வேளச்சேரி தொகுதிக்கும், எனக்கும் அதீதத் தொடர்பு இருக்கிறது. நான் 2 முறை சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது வேளச்சேரியில்தான் வசித்தேன்.நான் மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கிறேன். நாளைக்கு எந்த பொறுப்புக்கு வந்தாலும் என்னை உருவாக்கிய திருவான்மியூர், வேளச்சேரியை என்னால் மறக்க முடியாது.

தி.மு.. கூட்டணி வெற்றி பெறும்

நான் மேயராக இருந்தபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 10 மேம்பாலங்களை கட்டித்தந்தேன். அதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையில் ரூ.30 கோடியை நான் மிச்சப்படுத்திக் கொடுத்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

1996ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான்தான். 2011ஆம் ஆண்டு நான் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிட்டபோது என்னைத் தோற்கடிக்க அராஜகம் செய்தார்கள். ஆனாலும் 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்று மீண்டும் மேயர் ஆனேன். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் பணியாற்றி இருக்கிறேன். இந்த தேர்தலில் தி.மு.. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. முதல்-அமைச்சர் வேட்பாளராக நானும் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை நீங்கள் வெற்றிபெறச் செய்தால்தான் நான் முதல்-அமைச்சராக முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் என மோடிக்கு விருது வழங்கலாம்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

அரியலூர் அறிஞர் அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (ஏப்.03)  நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘’பிரதமர் வேட்பாளராக மோடி நின்றபோதே, மோடி மோசமானவர் என்றேன். அவர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டுக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்றேன். அவர், குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்கள் 3,000 பேரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கொன்றனர். அதன் பிறகுதான் மோடி தேசிய அளவில் பெரிய தலைவராக அறியப்பட்டார். அதன் பின்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் அவரைத் தேடிக் கண்டறிந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

ரு.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது என எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவிப்பை வெளியிட்ட ஒரே பிரதமர் இந்திய நாட்டுப் பிரதமர் மோடிதான். கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து மக்கள் கணக்கில் செலுத்துவேன் என்றார். இதுவரை செலுத்தினாரா?. அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் என மோடிக்கு விருது வழங்கலாம்.

அடிப்படைப் பிரச்சினைகளுக்காக என்றாவது பாஜகவினர் போராடி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. எந்நேரமும் போராட்டக் களத்தில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மத்திய அரசு நியமிக்கிறது. இதனைத் தடுக்க அதிமுகவால் முடியுமா?. ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு அம்பேத்கர், பெரியார், அண்ணா, திருவள்ளுவர், விவேகானந்தர், காமராஜர் உள்ளிட்டோரைப் பிடிக்காது. நம்மைக் குறி வைத்து, நமக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.

அண்ணா சிலையைத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்தான். பெரியார், அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்குக் காவியை பூசுவதுதான் பாஜக. பாஜகவுக்குத் தமிழ் பிடிக்காது. இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே பாஜகவுக்குப் பிடிக்கும். அம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ். காந்தியடிகளையே சுட்டுக் கொன்றது ஆர்எஸ்எஸ் இயக்கம். காமராஜர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். எனவே, சர்தார் வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே தடை செய்தார்.

பாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல்நீ இந்து, ‘நீ முஸ்லிம், ‘நீ கிறிஸ்துவன்என மதவெறியைத் தூண்டுவது மட்டுமே.’’

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

ஆண்டிபட்டி .தி.மு.. வேட்பாளர் பணப் பட்டுவாடா;

5 பேர் மீது வழக்குப் பதிவு

ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணம் கொண்டு செல்வது தெரியவந்த நிலையில், அவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பஞ்சராஜா தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அதிமுக வேட்பாளர் லோகிராஜனின் இரண்டு பிரச்சார வாகனங்கள் வந்தன.

அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு ரூ.28 ஆயிரம் பணத்தைப் பட்டுவாடா செய்வதற்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு வாகனத்திற்கு அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்பாளர் லோகிராஜன், அவரது சகோதரர் குபேந்திரன், நிர்வாகி பிரபு, ஓட்டுநர்கள் பாலமுருகன், பாண்டி ஆகியோர் மீது ராஜதானி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment