பிற இதழிலிருந்து... : தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 இன்னமும் இரண்டு குதிரை ஓட்டப் பந்தயமாகவே உள்ளது - 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

பிற இதழிலிருந்து... : தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 இன்னமும் இரண்டு குதிரை ஓட்டப் பந்தயமாகவே உள்ளது - 3

* ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

உறுதிமொழிகளும் உண்மை நிலையும் 

'ரேஷன் கார்டு' வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத் திற்கும் ஒரு 'வாஷிங்மிஷின்' வழங்குவது உள்ளிட்ட 160 உறுதி மொழிகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் பேசிய ஸ்டாலின்,  "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு 'ஹெலிகாப்டர்' வழங்கப் படும் என்று எடப்பாடியார் திடீரென அறிவித்தால் கூட எனக்கு அது வியப்பை அளிக்காது" என்று கிண்டல் செய்தார்.

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அதிமுகவுக்கு வாக்களித்தால்,  குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொள்வது என்பது போன்ற குழப்பம் நிறைந்த ஒரு வாக்குறுதியையும் அதிமுக அளித்துள்ளது.  மார்ச் 15 அன்று எடப்பாடியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ததற்குப் பிறகு செய்தி யாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி .பழனிசாமி, சிறுபான்மை மத மக்களைப் பாதுகாப்பது என்ற கொள்கைக்கு அதிமுக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.  குடி யுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம் என்று  அறிவித்துள்ளோம். எங்களால் மட்டுமே அவர் களைக் காப்பாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிந்திருப் பதால், சிறுபான்மை மத மக்கள் இந்தக் கோரிக்கையை எங்கள் முன் வைத்தனர் என்று கூறியுள்ளார்.  இந்த உறுதி மொழி குடியுரிமை திருத்த சட் டத்தைப் பற்றிய அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிரான தாகும்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 11 அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வாக் களித்த ஒரே காரணத்தினால், அந்த மசோதா நிறைவேற்றப் பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதர வாக 125 உறுப்பினர்களும், எதிராக 99 உறுப்பினர்களும் வாக்களித் திருந்தனர். மக்களவையில் ஒரே ஒரு அதிமுக உறுப்பினரான .பன்னீர் செல்வத்தின் மகன் .பி. ரவீந்திரநாத் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக மாற்றுவோம் என்று அளிக்கப்பட்டு உள்ள உறுதி மொழியும் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. வழக்குரைஞரும், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலை வர்களில் ஒருவருமான பி. ராஜ்குமார், ஆம். அவ்வாறு அதிமுக அறிவித்து உள்ளது. ஆனால், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மட்டும்  இல்லாமல் செயலளவிலும் அது நடத்தப்பட வேண்டும் அல்லவா? ஆனால் அது நடைபெறவில்லை என்று கூறுகிறார்.

கும்பகோணம் சட்டமன்ற தி.மு.. வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜி.அன்பழகன், சென்னையில் இருந்து அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் கள நிலையில் இது தொடர்பான எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி இருக்கும்போது வெறும் அறிவிப்பினால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? ஓர் அறிவிப்பு வெளியிடப்படும் போது, அதனை நடை முறைப்படுத்தும் ஏதேனும் சில திட்டங்களும் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்னும்போது, அவ்வாறு கூறுவதே மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.

கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான எட்டு டெல்டா மாவட்டங்களில் திமுக 19 தொகுதிகளிலும், அதிமுக 29 தொகுதிகளிலும் முன்னர் வெற்றி பெற்றுள்ளன. டெல்டா பகுதியின் மய்யத்தில் அமைந்துள்ள மன்னார்குடி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற தி.மு.. உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா, விவசாயத் துறையில் கடந்த 10 ஆண்டு காலமாக ஏற்பட்டு வரும் பின்னடைவு மற்றும் பொதுவாக மக்கள் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் மத்திய மாவட்டங்களில் நடைபெற உள்ள போட்டிகளை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான டி.ஆர். பாலுவின் மகனான ராஜா அதே மன்னார்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங்களது தி.மு.. ஆளும் அதிமுக கட்சியை விட பெரிய அளவில் பங்காற்றியுள்ளது, ஆனால் ஆளும் அதிமுகவோ வெறும் அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களுடன் தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு அறிவியல் அமைப்பின் துணைத் தலைவரான மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வி.சுகுமாரன், "டெல்டா மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றுகிறது" என்று கூறுகிறார். அவரைப் பொறுத்த வரை, ஜெயலலிதா இறந்து போனது முதல் மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் நாடகம் நடந்து வருவதை மக்களால் பார்க்க முடிகிறது. மிகக் கேவலமான முறையில் அரசு நடத்தப்படுவது, மிகப் பெரிய அளவிலான லஞ்ச ஊழல்கள், வாழ்க்கையில் மக்களுக்கு மிகவும் இன்றி யமையாத தேவைகளான அனைத்து நுகர் பொருள்களின் கடும் விலை உயர்வு போன்ற காரணங்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதைப் பெருமளவில் தீர்மானிக்கும் என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பணம் ஒன்றின் மூலம் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று கருதுவது ஒரு மாயை என்று கூறும் சுகுமாரன், "இது ஒரு மாயை என்பதை  நமது தலை வர்கள் பலரும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். பணத்தின் செல்வாக்கு பரவலாக நிலவுவதை நம்மால் பார்க்க முடிகிறது என்பது உண்மைதான். என்றாலும் மக்கள், தங்களது நெருக் கடியான நேரங்களில் யார் தங்களுக்குத் துணை நின்றார்களோ அவர்களுக்கே இன்றும் வாக்களிப்பார்கள்" என்று கூறுகிறார்.

கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள  கே. சீனிவாசனை இதற்கு எடுத்துக் காட்டாக அவர் கூறுகிறார். மிகமிக சாதார ணமான ஒரு குடும்பத்தில் இருந்து வந்துள்ள சீனிவாசன், ஏராளமான பணபலம் கொண்ட  இரண்டு அரசியல்வாதிகளான அதிமுகவின் கடம்பூர் ராஜூ மற்றும் அமமுகவின் தினகரன் ஆகியோரை எதிர்க்கும் மிகமிகக் கடுமையான ஒரு பணியை மேற்கொண்டுள்ளார். கோவில்பட்டியில் இருக்கும் ஒரு ஒப்பந்தக்காரரான மணிகண்டன், "கம்யூனிஸ்ட்  கட்சி வெறும் கட்டு சாதத்தை (பொட்டலத்தை) தருகின்றனர். ஆனால் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் பிரியாணி பொட்டலமும் 300 ரூபாயும் கொடுக்கின்றனர். அவர்களை எதிர்ப்பது என்ற மிகமிகக் கடுமையான பணியை சீனிவாசன் மேற்கொண் டுள்ளார்" என்று கூறுகிறார்.

திருத்துறைப் பூண்டியில் போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளரான கே.மாரிமுத்து ஒரு சாதாரணமான விவசாயக் கூலி. இன்னமும் ஒரு குடிசை வீட்டில்தான்அவர்  வாழ்கிறார். பல தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று மாரிமுத்து கூறுகிறார்.  தொகுதியில் தான் நன்றாக அறிமுக மானவர் என்று கூறிக்கொள்ளும் மாரிமுத்து, தனது பொரு ளாதார வசதியின்மை தனது தேர்தல் வாய்ப்புகளை பாதிக்காது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.

தி.மு..வின் உறுதிமொழிகள்

பெட்ரோல் மீதான மாநில வரியைக் குறைப்பது, பணி செய்யும் மகளிருக்கு ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மற்றும் ஏழைகளுக்கான பலவிதமான நலத் திட்டங்களையும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவும் திமுக உறுதி அளித் துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும், பேச்சுகளையும் மக்கள் தாங்களாகவே நேரடியாகப் பார்த்து கேட்டு அறிந்து கொள்ள இதன் மூலம் முடியும்.

மோசமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரிக்க சிறப்பு  விரைவு நீதிமன்றங்கள் அமைக் கப்படும் என்றும் தி.மு.. உறுதி அளித்துள்ளது. ஜெய லலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரித்து வரும் ஆணையம் தனது விசாரணையை விரைவில் முடித்து அறிக்கையை அளிக்கும்படி வலியுறுத்தப்படும் என்றும் தி.மு.. உறுதி அளித்துள்ளது.

இவை மட்டுமன்றி, விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யவும், பல்துறை சார்ந்த குறிப்பிட்ட உறுதிமொழி அளிக்கும் பரந்துபட்ட பல திட்டங்களையும் நிறைவேற்ற தி.மு..  உறுதி அளித்துள்ளது.

தேர்தல் பரப்புரை களத்தில், பெட்ரோல்-டீசல்-எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் அதன் விளைவாக அனைத்துத் துறைகளிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவனம் செலுத்தி பேசுகின்றனர். அது மட்டுமன்றி, தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்)  போன்ற பிரச்சினைகளில் மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு எவ்வாறு விட்டுக் கொடுத்துவிட்டது என்பதைப் பற்றியும் அவர்கள் பேசுகின்றனர். டெல்டா பகுதியில் எண்ணெய் வளம் தேடுவது என்பது போன்ற முயற்சிகளுக்கு மாநில நலன்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அனுமதித்தது பற்றியும் அவர்கள் பேசுகின்றனர். நீட் தேர்வு நடைமுறையை நீக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும் என்றும் தி.மு.. உறுதி அளித்துள்ளது.

மாநிலத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், தி.மு..வின் உறுதி மொழிகள் எந்த அளவில் நடைமுறை சாத்தியமானவை என்று கேட்கப்பட்ட போது, திமுகவின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு "எங்களால் காப்பாற்ற முடியாத வாக் குறுதிகளை நாங்கள் எப்போதுமே அளிப்பதில்லை. 2006 ஆம் ஆண்டில் எங்கள் தலைவர் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முதலாகக் கையெழுத்திட்டது விவசாயக் கடன் தள்ளுபடி ஆணையில்தான். . . . ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் தாங்கள் அளித்த உறுதிமொழிகளில் எத்தனை உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றிய முன்னேற்ற அறிக்கையை மக்களுக்கு முன்  வைத்தார்" என்று கூறி திமுகவின் கடந்த கால சாதனையை நினைவூட்டிப் பேசினார். என்றாலும் முதல்வர் பழனிசாமி வேறு விதமாக நினைக்கிறார். 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கருணாநிதி வாக்குறுதி அளித்திருந்தார். இல்லாத நிலத்தை உங்களால் எப்படி கொடுக்க முடியும்? அனைத்தும் பொய்கள். வாக்காளர்களின் வாக்குகளைப் பறிப்பதற்காகவே மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்கு அவர்கள் முயல்கிறார்கள், நடைமுறைப்படுத்த இயன்ற ஒரு திட்டத்தைப் பற்றிய உறுதிமொழி அளிக்கப்பட்டால், அதனை நிறைவேற்ற முடியும். உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நீங்கள் அளிப்பதன் மூலம் மக்களிடம் நீங்கள் கூற முயற்சிப்பது என்ன? என்று அவர்கூறியுள்ளார்.

அனைவரது பார்வையும் மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டின் மீதுள்ளது

மேற்கத்திய மாவட்டங்களில் அதிமுக மீது இருக்கும் மக்களின் கோபம் வெளிப்படையாகவே தெரிகிறது. முதல்வர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற உண்மையை அச்சமூகத்தினர் மறந்து விட வில்லை. இந்தப் பகுதியில் ஜாதி ஒரு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது. சேலம்,  மாவட்டத்தில் பெருவெற்றி பெறுவதற்கு  முதல்வராலும், கோவையை தக்க வைத்துக் கொள்ள எஸ்.பி.வேலுமணியாலும், நாமக்கல் மாவட்டத்தில் வெற்றி பெறுவதை  பி. தங்கமணியாலும் பார்த்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமன்றி, மற்ற மாவட்டங்களும் கூட அதிமுகவின் வழிக்கு வரும் என்று அவர்கள் திடமாக நம்புகின்றனர்.

கோவையிலும், திருப்பூரிலும் பா...வுக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன. தனது பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஒரு வியாபாரி, யாருக்கு வாக்களிப்பது என்று திருப்பூர் மக்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. திருப்பூர் மக்களின் வாக்கு தங்களுக்கே கிடைத்துவிடும் என்று எவராலும் கருத முடியாது. .. .கமலஹாசன் மீதான சிறிது கவர்ச்சியும் இருக்கிறது . . . அவர் ஒரு நடிகர் என்பதால் அது இருக்கக் கூடும்" என்று கூறுகிறார்.

பா... போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும்  மலையேற்றம் போன்ற கடுமையான முறையில் வேலை செய்ய வேண்டியவர்களாக அக் கட்சியினர் உள்ளனர். தவிர்க்க இயலாதபடி பா...வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமலஹாசனுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நடி கருக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட் பாளர், மயூரா ஜெயகுமார் என்ற காங்கிரஸ்காரர் ஆவார்.

தேர்தலுக்கு முன்னமேயே பா...வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் குறிப்பிடத் தகுந்த களப் பணி செய்துள்ளார். அப்படியிருந்தும் திமுகவின் வேட்பாளர் கயல்விழி செல்வ ராஜ் அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்கப்பட முடியாதவர் என்பதையும் அவர் பார்க்கிறார். இதே போன்ற ஒரு கதைதான் அரவக் குறிச்சியிலும் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ்நாட்டுக்கான ஒருங்கிணைப் பாளரான பா... வேட்பாளர் அண்ணாமலை திமுகவின் இளங்கோவுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

2016 தேர்தலில் மேற்குமாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளில் 32 தொகுதிகளில் அஇதிமுக வெற்றி பெற்றது. இந்த மாவட்டங்களில் உள்ள தி.மு.. கட்டமைப்பு  இப்போது மாற்றி அமைக்கப்பட்டு, மேலானவேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் தங்கள் வெற்றி வாய்ப்புகள் கூடும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.

மேற்குப் பகுதியில் அதிமுகவினால் நன்றாக செயல்பட முடியாமல் போனால், முழு தமிழ்நாட்டையுமே  அது இழந்துவிட்டது என்பதை பாதுகாப்பாக ஊகித்துக் கொள்ளலாம். அதிமுக - பா... கூட்டணி தங்களது வெற்றிக்காக, மாநிலத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களையே பெரிதும் நம்பியிருக்கிறது. பாரம்பரியமான தி.மு.. கோட்டை யான சென்னை பகுதியில் குறைந்தது திமுக அளவுக்காவது தாங்களும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று அது கருதுகிறது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில்   வடக்கு மாவட்டங்களில் தி.மு.. 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது; .தி.மு.. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை,  பா...வின் வேண்டுகோளை ஏற்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10.5 சத விகித உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காரணத்தால்,  ஆளும் அதிமுக கூட்டணி கூடுத லான தொகுதிகளை வெல்ல முடியும் என்று நம்பியிருக்கிறது. ஆனால் அவ்வாறு செய்வது கூறுவதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் ஆனால் செயல்முறையில் எளிதாக இருக்காது. வட மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் தகவல்களைப் பார்க்கும்போது, வன்னியரைத் தவிர்த்த மற்ற அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக சேர்ந்து அதிமுக கூட்டணிக்கு எதிராக, தேர்தலில் வெற்றி பெறும் என்று தாங்கள் கருதும் திமுக கூட்டணிக்கு, ஒட்டு மொத்தமாக வாக்களிக்கவும் கூடும் என்று தோன்றுகிறது. திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிரான எதிர்ப்பு ஒன்று பலமாகத் திரட்டப் படுகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாதவர்கள் காரணமாக இரு அணிகளுமே பல தொல்லைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி. வீரமணி பலமாக இருப்பதாகத் தோன்று கிறது. ஆனால் மற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்று கருதப் படுகிறது. வாணியம்பாடியில் IUML கட்சிக்கு கவலை அளிக்கும் வகையில் போதுமான வாக்குகளை AIMIM கட்சியினால் எடுத்துக் கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாக, இந்த தொகுதியை முஸ்லிம் கட்சிக்கு கொடுத்ததைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

சென்னை தேர்தல் நிலவரக் காட்சிகள்

சென்னையின் 16 தொகுதிகளில் தங்களால் பெருவெற்றி பெற முடியும் என்று திமுக கூட்டணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 2016 தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றாவதாக வந்த பா... இம்முறை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறமுடியும் என்று நம்பியிருக்கிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பா... வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் பெரும் சேவையாற்றி வருபவர் என்று நன்கு அறியப்பட்ட திமுக வேட்பாளரான டாக்டர் எழிலனை எதிர்த்து அவர் போட்டியிட வேண்டியுள்ளது. திமுக விலிருந்து பா..கட்சிக்கு சென்றுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு..செல்வத்திற்கு பா... வாய்ப்பு அளிக்காததும் ஏற்கெனவே கட்சியினரிடம் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில், ஸ்டாலின் தகுதி வாய்ந்த ஒரு அதிமுக தலைவரான ஆதிராஜாராமை எதிர்கொள்கிறார். மேயர் தேர்தலில் ஸ்டாலினை முன்னர் எதிர்த்து தோல்வி அடைந்தவர் இந்த ஆதி ராஜாராம். ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி அவரது போட்டியாளராக பா... வேட்பாளரிடமிருந்து பெரிய அளவிலான சவால் எதனையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கவில்லை. இந்தத் தொகுதியில் பா...வுக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை.

சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவின் முன்னாள் மேயர் எம்.பி.சுப்பிரமணியனுக்கும், அதிமுகவின் முன்னாள் மேயரான சைதை துரைசாமிக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும்.

(நிறைவு)

நன்றி: 'ஃப்ரன்ட் லைன்' 09-04-2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment