பிற இதழிலிருந்து... தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 இன்னமும் இரண்டு குதிரை ஓட்டப் பந்தயமாகவே உள்ளது - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

பிற இதழிலிருந்து... தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 இன்னமும் இரண்டு குதிரை ஓட்டப் பந்தயமாகவே உள்ளது - 2

* ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

கூட்டணிகளுக்கு உள்ளேயான நம்பிக்கைகள்

 2021  தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கூட்டணிகளுமே ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான சமமற்ற ஒரு களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. பத்தாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்து வந்துள்ள திமுக, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் புத்துணர்வு பெற்று வந்து, மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஏராளமான உண்மைகள் தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்று கருதி தி.மு.. அணி மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. அவற்றில், ஜெயலலிதா இல்லாமல் போனது, ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை கூட்டணியில் புறக்கணித்தது, பா...வின் விருப்பங்களுக்கெல்லாம் இடம் கொடுத்தாக வேண்டிய நிலை ஆகியவற்றுடன், இத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்ற ஒரு பரவலான உணர்வு மாநிலம் முழுவதிலும் மக்களிடையே பரவியிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1 . 03  சதவிகித வாக்கு வேறுபாடுதான் திமுகவை எதிர்க்கட்சியாக ஆக்கியது. பதிவான வாக்குகளில் அதிமுக 40 . 88 சதவிகிதமும், திமுக 39 .85 சதவிகிதமும் பெற்றிருந்தன. அது நடந்தது ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அதுவும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கத்தை அவர் வலியுறுத்தி வந்தபோது நடைபெற்றது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு உட்கட்சி சண்டைகளால் .தி.மு.. பிளவுபடத் தொடங்கியது.  தற்போது உதவி முதல்வராக இருக்கும் . பன்னீர்செல்வம்தான் ..மு.. உருவாவதற்கான வழியை உருவாக்கித் தந்தார். தங்களிடம் குவிந்திருக்கும் ஏராளமான பணத்தையும், பயன் நிறைந்த ஒரு சமூக ஊடகங்களின் பரப்புரைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் .தி.மு.., தி.மு.. குடும்ப அரசியல் செய்வதாகவும், தி.மு.. ஆட்சிக்கு வந்தால் அது செய்யும் ரவுடித்தனத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழும் என்றும் கூறி வருகிறது. அதிமுகவின் உச்சக்கட்ட பிரச்சாரமே எப்போதுமே ஆளுங்கட்சிகளால் அடிக்கடி வலியுறுத்தப்படுவது "திமுக ஆட்சிக்கு வந்தால்  மக்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ஒரு குடும்பம் மட்டுமே முன்னேற்றமடையும்" என்பதுதான். திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதை அதிமுகவினர் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.

பா..கட்சிக்கு தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் பிரதி உபகாரமாக,  திமுகவின் தேர்தல் செலவை, தங்களின் அதிகாரத்துக்குக் கீழ் இருக்கும் மத்திய புலன் விசாரணை அமைப்புகளைப் பயன் படுத்தி, பா... அரசு கட்டுக்குள் வைத்திருக்கும் என்று அஇதிமுக நம்புகிறது. மறு பக்கத்தில் மாநில மத்திய ஆளுங்கட்சிகளின் கூட்டணிக்கு அதற்குரிய அனுகூலங்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டு உண்மைகள் காவல்துறை அதிகாரிகளின் மீது செல்வாக்கு செலுத்தும் என்று பல காவல்துறை அதிகாரிகள் ஃப்ரன்ட் லைனிடம் தெரிவித்தனர். முதலாவது அதிமுக பத்தாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. பா... அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதனால், தேர்தல் நடத்தை விதிகளை ஆளும் கட்சியினர் பின்பற்றத் தவறும்போது,  காவல்துறை அதிகாரிகள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில அதிகாரிகள் தாங்கள் வகிக்கும் பதவிகளிலேயே நீண்ட காலமாக இருந்து வந்திருந்த போதிலும், 2021  மார்ச் மாதம் பிற்பகுதி வரை ஒட்டு மொத்தமாக காவல் துறை அதிகாரிகளோ இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளோ மாற்றம் செய்யப்படவில்லை என்று ஒரு அரசு அதிகாரி கூறினார். பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் இரண்டில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தத் தேர்தலை ஒரு கடுமையான போட்டியாக மாற்றுவதற்கு தங்களால் இயன்ற எதையும் ஆளுங் கூட்டணியினர் செய்யாமல் விட்டுவிடவில்லை.

தேர்தல் களப்படை வரிசை

234 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.. 174 இடங்களிலும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 25 இடங்களிலும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த் குமார் காலமானதை அடுத்து காலியான கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகளிலும்,   மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவை தவிர, சில சிறிய  உள்ளூர் செல்வாக்கு உள்ள கட்சிகள் திமுக வின் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

அதிமுக 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பா... 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வன்னியர்களின் நலன்களுக்காக பாடுபடும் பாட்டாளி மக்கள் கட்சி 23 இடங்களில் போட்டியிடுகிறது. தற்போதுள்ள இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்காக 10 . 5 சதவிகித உள்ஒதுக்கீடு அளித்திருப்பது இக்கட்சியை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு தொகுதிகள் தரப்பட்டுள்ளன. எஞ்சிய சில இடங்கள் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் தங்களுக்கு தொகுதி ஒதுக்கியதில் மனநிறைவு அடையாத, விஜயகாந்த் தலைமையிலான  தேசிய முற்போக்குக் கூட்டணி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ..மு.. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

வேறு இரண்டு கூட்டணிகளும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. நடிகர் கமலஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஒன்று. தினகரனின் தலைமையிலான அமமுக ஆகியவை தமிழ்நாட்டு அரசியலில் நீடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. சீமானால் துவக்கப்பட்ட தமிழ் தேசியக் கட்சி மாநிலம் முழுவதிலும் 3 சதவிகித வாக்குகளைப் பெற்று, பல இளைஞர்களைக் கவர்ந்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் இக்கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது.

தனது அரசுப் பணியின் கடைசி காலத்தில், தனது பணியைத் துறந்த ... அதிகாரி, லஞ்ச ஊழலுக்கு எதிரான ஒரு போராளி என்ற தனது தோற்றத்துடன்,   .சகாயம் என்பவர் அரசியலில் பிரவேசம் செய்து, குறிப்பிடத்தக்க கிறித்தவ மக்கள் வாழும் 20 தொகுதிகளில் போட்டி இடுகிறார். இதன் விளைவாக அவர், தி.மு..வுக்கு செல்லக் கூடிய  கிறித்தவ மக்களின் வாக்குகளைப் பிரிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அக்குற்றச்சாட்டை உறுதிப் படுத்தும் வகையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.  ஆனால், எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக அவர் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. அகில இந்திய மஸ்லிஸ் முசல்மீன்  (AIMIM) மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) என்ற இரண்டு முஸ்லிம் கட்சிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அணி சேர்ந்துள்ளன.

காங்கிரஸ், பா... இரண்டு கட்சிகளுமே பிரச்சினையின் பகுதிகளாக இருப்பதாக தொடர்ந்து AIMIM கருதி வருகிறது. பல நேரங்களில் இந்த இரு கட்சிகள் மீதும் சம அளவில் தாக்குதலை அது நடத்தியது பல பகுதிகளிலும் பா..கட்சிக்கு பெருமளவில் சாதகமாக அமைந்தது.

முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியும் என்று SDPI மிகுந்த நம்பிக்கையுடன்  உள்ளது. ஒரு தென் காசி வியாபாரியான எம். ரஷீத் என்பவர்,   "SDPI அ..மு.. கூட்டணியில் இருப்பது திமுகவுக்கே உதவி செய்யும். மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கும் தி.மு..வின் பக்கத்தில் அனைத்து சராசரி முஸ்லிம் களும் இருப்பார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி அது. .... AIMIM, SDPI ஆகியவற்றின் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்பில்லை" என்று கூறுகிறார்.

ஜாதி மற்றும் மத சமூகக் காரணிகள்

சட்டமன்ற தேர்தல் போட்டியில், அரசமைப்பு சட்ட தனித் தொகுதி காரணமாக மொத்தத்தில் தி.மு.., அதிமுக கட்சிகளில் தலா 44  தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் (அவர்கள் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி)  போட்டி இடுகின்றனர்.  பிற்படுத்தப் பட்ட பிரிவு மக்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் இந்த இரண்டு கூட்டணிகளிலுமே நல்ல பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பது, தேர்தல் கணக்கீடுகளில் ஜாதிக்கு உள்ள முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த 42 வேட்பாளர்களும், திமுக கூட்டணியில் 36 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் 27 தேவர்களும், அதிமுக கூட்டணியில் 37 தேவர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 27 பேரும், அதிமுக கூட்டணியில் 32 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணி சார்பாக 4 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதம் அளவில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு அதிமுக கூட்டணியில் மிகக் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் 10 கிறித்தவ சமூக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதிமுக கூட்டணியில் 8 கிறித்தவ சமூக வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

.தி.மு..வின் தேர்தல் பரப்புரை

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்தது,  விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது,  11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவக் கல்வி சேர்க்கையில் 7 . 5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது, ஜல்லிக் கட்டின் மீதான தடையை விலக்கிக் கொண்டது, காவேரி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது, கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது, கோவிட்-19 தொற்றுநோயைப் பயன் நிறைந்த வழிகளில் கட்டுப்படுத்தியது என்பது போன்ற அரசின் பல்வேறுபட்ட சாதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் வியப்பை அளிக்கும் வகையிலான காணொலி காட்சிகளையும், மீம்ஸ்களையும் கொண்டு சமூக ஊடகத்தின் மூலம் பயன் அளிக்கக் கூடிய  தேர்தல் பரப்புரையை அதிமுக மேற்கொண்டுள்ளது.

மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் நிலவும் வகையில் சட்டத்தின் ஆட்சி பயன் நிறைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டதுவும், கடந்த சில ஆண்டுகளில் வீசிய புயல்களினால் ஏற்பட்ட சேதங்களை அரசு திறமையுடன் கையாண்டதுவும், பொங்கல் நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும் பத்துக்கும் 2500 ரூபாய் அளித்ததும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி புத் தகங்கள், காலணிகள் போன்றவை வழங்கப் பட்டதும், கறவை பசுமாடுகள் மற்றும் ஆடுகளை மக்களுக்கு வழங்கும் ஒரு திட்டம், வன்னியர் சமூகத்துக்கு

10 . 5 சதவிகித அளவில் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளித்ததும் தேர்தல் பரப்புரையில் முன்னிலை பெற்றிருந்தது. தி.மு.. வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் உத்திக் குழு தி.மு.. தலைவர் ஸ்டாலினை பெரிய அளவில் முன்னிலைப் படுத்திக் காட்டியது. என்றாலும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு போன்ற  மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றி தி.மு..வின் தேர்தல் ஊடக பரப்புரையில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

(தொடரும்)

நன்றி: 'ஃப்ரன்ட் லைன்' 09-04-2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment