தமிழகத்தில் நோட்டாவை தாண்டும் அளவிற்காவது வாக்கு கிடைக்க மோடி நடத்தும் நாடகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

தமிழகத்தில் நோட்டாவை தாண்டும் அளவிற்காவது வாக்கு கிடைக்க மோடி நடத்தும் நாடகங்கள்

10:37 - ரஜினி காந்திற்கு தாதாசாகெப் பால்கே விருதை பிரகாஷ் ஜவடேகர் அறி விக்கிறார்.

10:41 - அசாம் மாநில கோக்ராஜர் தேர்தல் பரப்புரைக்குச்சென்று கொண்டு இருந்த மோடிதலைவருக்கு இந்த விருது கொடுக் கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று டுவீட் செய்கிறார்.

10:45 - ரஜினிக்கு தாதாசாகெப் பால்கே விருது _ தமிழகத்தில் தற்போது தேர்தல் நடை பெறுவதற்கும் இந்த அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பிரகாஷ் ஜவடேகர் விளக்கினார். அதாவது எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதைதான் இது என்பது அப்பட்டமான ஒன்று.

வாக்குப் பதிவுக்கு முன்னதாக ரஜினி காந்துக்கு இப்படி ஒரு விருது கொடுத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அப்படியே பாஜகவுக்கு அலை அலையாக திரண்டு போய் வாக்களித்துவிடுவார்கள் என பாஜக தமிழக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் ஜி.டி. ரவி ஆலோசனை கூறினாரோ என்னவோ (ஜி.டி. ரவி ரஜினி ரசிகர் மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது).

 மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் போது பிரதமர் மோடி வங்கதேச பயணம் சென்றார். அங்கு முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் மகுவா இன தலைவர்களை சந்தித்தது, அவர்களின் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டு அதை மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் அன்று கூட நேரலையில் அனைத்து ஊடகங்களும் காண் பித்தன. இதன் மூலம் மேற்குவங்கத் தேர்தலில் குறிப் பிட்ட ஜாதி மக்களின் வாக்கை தமக்கானதாக மாற்ற மோடி மஸ்தான் வேலையில் இறங்கியுள்ளார்.

 வாரணாசி தேர்தல் வாக்குப் பதிவு அன்று கேதர்நாத் கோவிலுக்குச் சென்று அங்கு ஒரு குகையில் அமர்ந்துகொண்டு ஒற்றைக்கண்ணால் காமிராக்கள் சரியான ஆங்கிளில் தம்மை ஒளி பரப்பு கிறதா என்று பார்த்த மோடி, இப்போது தமிழகத்தில் ரஜினிக்கு விருது, மதுரை கோவி லில் வேட்டி கட்டி தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு பவ்யமாக அனைத்து தூண்களில் உள்ள சிலைகளுக்கும் கும்பிடு போடுவது என வலம் வந்துகொண்டு இருக் கிறார். தமிழக மக்கள் இதை எல்லாம் கண்டு குறைந்த பட்சம் நோட்டாவைத் தாண்டும் அளவிலாவது வாக்கு அளித்துவிடுவார்கள் என்ற ஒரு நப்பாசையே.....

No comments:

Post a Comment